24 பிப்ரவரி 2019

இளையான்குடிமாற நாயனார் குருபூஜை!

DIN | Published: 11th September 2018 04:23 PM

 

கடுமையான வறுமையிலும் அடியார்களுக்கு விருந்தளிக்கும் உயர்ந்த பண்பினை உடையவர் இளையான்குடிமாறநாயனார். இவர்தம் உயரிய பண்பை உலகுக்கு உணர்த்த, ஈசனே அடியார் வேடமிட்டு இவர் இல்லத்திற்கு எழுந்தருளி, மாறனாரை ஆட்கொண்ட பேறு  பெற்றவர்!

இத்தகைய பெருமை பெற்ற இளையான்குடி மாற நாயனாரது குருபூஜை ஆவணி மக நட்சத்திரத்திரமான (8-9-2018) சனிக்கிழமை அன்று, கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் சார்பில், அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபிரகன்நாயகி உடனாகிய ஸ்ரீபிரகதீஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைபெற்றது. 

காலையில் ஸ்ரீ சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இளையான்குடிமாற நாயனார் திருவுருவப்படத்திற்கு சிறப்பு வழிபாடும் திருமுறை பாராயணமும் நடைபெற்றது. மதியம் சிவனடியார்களுக்கும் பக்தர்களுக்கும் கிராம மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

இவ்வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருக்கூட்ட ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர். 

ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம், கும்பகோணம்

தொலைபேசி - 0435 2413131
 

More from the section

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் தேரோட்டம்
திருப்பதிக்குப் போவதாக இருந்தால் இப்படித்தான் போகணும்?
ராகுவும், ராகுவால் திருமணத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும்!
புத்தொளி பெற்ற கீழ்க்குளத்தூர் அகஸ்தீசுவரமுடைய மகாதேவர் திருக்கோயில்
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும்?