வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

கும்பகோணம் ஆட்டுக்குட்டி சித்தர் ஜீவசமாதி சந்நிதானத்தில் குருபூஜை

DIN | Published: 11th September 2018 12:16 PM


கும்பகோணம் அரசு மருத்துவமனையின் பின்புறம், காவிரி ஆறு வழிச்சாலையில் அமைந்துள்ள பதினாறு அடி உயர வடிவுடைய, அருள்மிகு அஷ்டபுஜ திருவராகி அம்மன் எழுந்தருளியிருக்கும்,  
ஆட்டுக்குட்டி சித்தர் ஜூவசமாதி சந்நிதானத்தில் 10.9.2018 காலைக் குருபூஜை நடைபெற்றது.
 
சித்தரின் குருபூஜையை முன்னிட்டு, காலையில் சிறப்பு ஹோமங்களும், ஆட்டுக்குட்டி சித்தரின் ஜீவசமாதி அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், அதன் பின் தூப தீப  
ஆராதனைகளும் நடைபெற்றது. மேலும், இவ்விழாவில் தேவார, திருவாசக பதிகங்களும், பக்தி பாடல் இன்னிசை கச்சேரியும், அதனைத்தொடர்ந்து வந்திருந்த அனைவருக்கும் சிறப்பு அன்னதானம்  
வழங்கப்பட்டது. 

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இவ்விழா ஏற்பாட்டினை, ஆட்டுக்குட்டி சித்தரின் சீடர், அருள்மிகு அஷ்டபுஜ ஸ்ரீவாரகி உபாசகர், மற்றும் சித்தரின் பக்தர்கள் மிக சிறப்பாகச்    
செய்திருந்தார்கள்.

குடந்தை - ப.சரவணன் 9443171383
 

More from the section

காணும் பொங்கல் : திருத்தணி முருகப் பெருமான் திருவீதியுலா
பார்வேட்டைக்குச் சென்ற மாமல்லபுரம் தலசயனப் பெருமாள்
ஏழுமலையானை தரிசித்த நடிகர்கள் தனுஷ், ஸ்ரீகாந்த்
ஓசூரம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
பார்வேட்டைக்குச் சென்ற வரதராஜப் பெருமாள்