புதன்கிழமை 16 ஜனவரி 2019

வேதாந்த தேசிகனுக்கு 750-வது நக்ஷத்திர வார்ஷீக மஹோத்ஸவம் 

DIN | Published: 11th September 2018 03:10 PM

 

காஞ்சி விளக்கொளி மரகதத்தின் மருங்தே அமர்ந்த ஸ்ரீ தூப்புல் வேதாந்த தேசிகனுக்கு 750-வது புரட்டாசி திருவோண நக்ஷத்திர வார்ஷீக மஹோத்ஸவம் நடைபெறுகிறது. 

முக்திதரும் நகரேழில் முக்கியமாம் கச்சிதன்னில் விளக்கொளியைச் சேர்ந்த தூப்புல் நகரில் திருவவதரித்த ஸ்ரீ வேதாந்த தேசிகனுக்கு நிகழும் விளம்பி வருஷம் ஆவணி மாதம் 27-ம் தேதி (12-9-2018) முதல் கீழ்க்காணும் உற்சவ விவரப்படி 11 தினங்களும் மிகச் சிறப்புடன் மஹோத்ஸவம் நடைபெறும். 

அன்பர்கள் அம்மஹோத்ஸவங்களனைத்திலும் அந்வயித்து 10 நாள் திருவோணத் திருநந்நாளிலே பேரருளாளன் ஸன்னதிக்கு எழுந்தருளி எல்லா ஸன்னதிகளிலும் மடங்களாசாஸனம் செய்து திருமலையில் ஸ்ரீதேவாதிராஜனை திருவடித்தொழுது சகலவிதமான மாயாதைகளைப் பெற்றுக்கொண்டு எழுந்தருளும் அழகையும், பேரருளாளன் திருவருளால் பூமாரி பொழிவதையும் கண்டு இன்புற்று இம்மை மறுமை நலன்களை அடைய வேண்டுமென வேண்டுகிறோம்.
 

More from the section

ஸ்ரீரங்கம்: தங்க  கருட வாகனத்தில் நம்பெருமாள் இன்று வீதி உலா
திருமலையில் இன்று ஆர்ஜித சேவைகள் ரத்து!
ஜன.18-இல் உலக நன்மைக்காக  ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்
திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
திருமலையில் நாளை ஆர்ஜித சேவைகள் ரத்து