21 ஏப்ரல் 2019

திருமலையில் வன விலங்குகளின் சிலைகள் அமைப்பு

DIN | Published: 22nd March 2019 02:41 AM
திருமலையில் வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரிய வகை உயிரினங்களின் சிலைகள்.


ஏழுமலையான் கோயில் கொண்டுள்ள திருமலையில் உள்ள சிலாதோரணம் பகுதியில் அரிய வனவிலங்குகளின் சிலைகளை தேவஸ்தானம் அமைத்துள்ளது.
திருமலையில் உள்ள சேஷாசல வனப் பகுதியில் புனிதமான அருவிகள் அமைந்துள்ளதோடு, இங்கு அரிய வகை உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. இயற்கை விரும்பிகளுக்கு சேஷாசல மலை சொர்க்கம் போன்றது. எனவே, இந்த வனப் பகுதியில் காணப்படும் அரிய வகை உயிரினங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி வனத்துறை உதவியுடன் திருமலையில் உள்ள சிலாதோரணம் பகுதியில் உள்ள தோட்டத்தில் அந்த உயிரினங்களின் சிலைகளை அமைத்துள்ளது. 
புதுச்சேரியைச் சேர்ந்த யுனிவர்சல் எக்கோ ஃபவுண்டேஷன் நிறுவன நிபுணர்கள் உதவியுடன் ரூ.10 லட்சம் செலவில் தேவாங்கு, மயில், சிங்கவால் குரங்கு, மலைப்பாம்பு, நட்சத்திர ஆமை, பச்சோந்தி, அணில், பல வகை பாம்பு இனங்கள், பட்டாம்பூச்சிகள், பறவையினங்கள் உள்ளிட்ட உயிரினங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் உள்ளதால், அதைத் தடுத்து இயற்கை வளத்தை பேணிக்காக்க வேண்டும் என்பதை மக்களுக்கு வலியுறுத்த இந்த நடவடிக்கையை தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. மேலும் இதே போன்ற ஒரு பூங்காவை கீழ் திருப்பதியில் விரைவில் அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

 

More from the section

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணெய்த் தாழி உற்சவம்
திருப்பதியில் 24 மணி நேர ரத்த வங்கி திறப்பு
ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் (மினி தொடர்) - பகுதி 7. அபிமுகேஸ்வரர் திருக்கோயில்
குழந்தை பாக்கியம் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!
மண்டகப்படி சுடலைமாடசாமி கோயிலில் ஏப். 22ல் கும்பாபிஷேகம்