புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

வால்மீகீஸ்வரர் கோயிலில்  திருக்கல்யாண உற்சவம்

DIN | Published: 22nd March 2019 02:40 AM
 திருக்கல்யாண உற்சவத்தில்  வால்மீகீஸ்வரர் - வடிவுடை அம்மன். 


ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரத்தில் வடிவுடை அம்பாள் சமேத வால்மீகீஸ்வரர் கோயில்  பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு திருவலம் சர்வ மங்களா பீடத்தின் சாந்த சுவாமிகள் முன்னிலையில் மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட  உற்சவர் வால்மீகீஸ்வரருக்கும் வடிவுடை அம்மைக்கும்  உத்திர நட்சத்திரம் கன்னியா லக்கினத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவில் பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் உபயதாரர்கள் சார்பில்  வேட்டி, சேலை, இனிப்பு வகைகள், பழங்கள்,தேங்காய் உள்ளிட்ட பொருள்களை சீர்வரிசை வைத்தனர்.

 

More from the section

இந்த ராசிக்காரர்கள் சமயோசித புத்தியுடன் செயல்படுபவர்களாமே!அப்படியா?
யாரெல்லாம் பஞ்சமி திதியில் விரதமிருந்து வழிபட வேண்டும்?
பழனியில் ரோப்கார் சேவை இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தம்!


சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலுக்கு 2 லட்சம் பக்தர்கள் பாத யாத்திரை

கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் தீச்சட்டி ஊர்வலம்