புதன்கிழமை 20 மார்ச் 2019

காவிரித் தீர்ப்பு - 2 நீர் ஒதுக்கீடு தொடர்பாக கர்நாடகா மாநிலத்தின் சார்பில் பல்வேறு தலைப்புகளில் ஃபாலி எஸ். நாரிமன் முன்வைத்த வாதங்கள்...

By வழக்கறிஞர் சி.பி. சரவணன்| DIN | Published: 23rd February 2018 04:27 PM

 

(Arguments advanced on behalf of State of Karnataka as regards the allocation of water on various heads)

காவிரி ஆறு சம்மந்தமான உச்சநீதிமன்ற தீர்ப்பின் 345 முதல் 348 பக்கங்களில் கற்றறிந்த மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ். நாரிமன் அவர்களின் நீர் ஒதுக்கீடு தொடர்பான வாதங்கள்…


1. திரு ஃபாலி எஸ். நாரிமன் சமர்ப்பிப்புகள் (Submissions of Mr. Fali S. Nariman)

292. தமிழகம், காவிரி தீர்ப்பாயத்தில்  1974 ஆண்டுக்கு முன் 28.20 லட்சம் ஏக்கர் பாசன பரப்பை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது, தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் 21.38 லட்சம் ஏக்கர் பாசனபரப்பை
மட்டுமே உருவாக்க தமிழ்நாட்டிற்கு உரிமை உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளது. 

எனினும், தீர்ப்பாயம், ஒரு நியாயமற்ற மற்றும் சமாதான முறையில், தமிழகத்திற்குக் கூடுதலாக 3.32 லட்சம் ஏக்கர் பாசன நிலத்திற்கு தண்ணீர்  வழங்குவதற்கு "தகுதி மற்றும் சமபங்கு" என்ற
தெளிவற்ற காரணங்களை (Grounds) முன்வைத்து ஒதுக்கீடு செய்துவிட்டது.

இந்த 3.32 லட்சம் ஏக்கர் நிலத்திற்கான கூடுதல் ஒதுக்கீடு, 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பார்வைக்கு வெளியே அமைந்துள்ளது மற்றும் சமமான ஒதுக்கீடு எனவும் கூற முடியாது.

மேலும் தீர்ப்பாயத்தின் ஒதுக்கீடு, ஹெல்சிங்கி விதிகள், 1966 இன் கொள்கைகளின் படி, ஒரு வடிகால் மாநிலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் போது, மற்ற மாநிலத்திற்கு பாதிப்பு ஏற்பட கூடாது
என்கிற அடிப்படையில் அமையப்பெறவில்லை.

தீர்ப்பாயம் ஸ்தாபிக்கப்பட்ட மற்றும் ஒப்பீட்டளவிலான தேவைகளின் அடிப்படையில் அல்லாமல், 1924 ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீர்ப்போக்கின் அளவில் தண்ணீர் வழங்கியுள்ளது.

தீர்ப்பாயத்தில் கர்நாடகத்தின் நிலைப்பாடு, எப்பொழுதும் தண்ணீர் தேவையை பொருத்து அமைந்ததே தவிர, நீர்ப்போக்கின் அடிப்படையில் இல்லையெனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு தேவையடிப்படையிலான ஒதுக்கீடு, ஆற்றின் பள்ளத்தாக்குக்கு ஒரு மாநிலத்தின் தண்ணீர் பங்களிக்கும் அளவையையும், ஆற்றின் கரையிலுள்ள ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகை,
ஒவ்வொரு மாநிலத்தின் பயிரிடக்கூடிய பகுதியும், பயிர்கள் வளர தண்ணீர் தேவைப்படும் தண்ணீர் அளவையும் கணக்கில் கொள்ளவேண்டும், காவேரி நீர் விவகாரத்தில் தீர்ப்பாயத்தை பொறுத்தவரையில்,
இந்த கோரிக்கைகள் எதனையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

293.  தமிழ்நாடு, 1924 ஆம் ஆண்டு ஒப்பந்த விதிமுறைகளின் படியே தரப்பினர் நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் தொடர்ந்து நிலைநிறுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டின் பாசன
நிலத்தை கணக்கில் எடுத்துக் கொண்டபின் அத்தகைய குவாண்டம் தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டது 1924 ஒப்பந்தத்தின் நோக்கம் மற்றும் வரம்புக்கு அப்பாற்பட்டது. 

எனவே, 1924 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் வரம்பிற்குட்பட்டு, ஒதுக்கப்பட்டுள்ள அதிகப்படியான தண்ணீர் தவிர வெளியேயுள்ள நிலத்திற்கான  பயனை தமிழ்நாடு அடைய முடியாது. மேலே கூறியபடி,
தீர்ப்பாயம் கர்நாடகாவின் முன்னோடி மாநிலத்தை பார்க்கும் போது  கர்நாடகாவின் நலன்களைத் தேவைகளைக் கண்டும் காணாமலும் விட்டுவிட்டது.

இந்த தீர்ப்பாயம் தமிழகத்திற்கு பல சலுகைகளை அளித்துள்ளது. விசாரணையின் போது, தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் அதன் தேவையை விட அதிகமாகவும், 1924-ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்
வெளிப்பாட்டிற்கு வெளியேயும் வழங்கியுள்ளது.

அதிக அளவு நீர் சேமிப்புகளை பரிந்துரை செய்த, சல்தானா குழுவின் அறிக்கையை 1977-ல் (Saldanha Committee Report, 1977) சுட்டிக் காட்டி, தற்போதுள்ள நீர் உபயோகத்தில், தீர்ப்பாயம் தமிழ்நாட்டிற்கு 393
டி.எம்.சி நீர் மட்டுமே ஒதுக்கீடு செய்தது, அதிகம்.

294. மாற்றாக, நீதிக்கு இணங்கி தண்ணீர் ஒதுக்கீடு மாநிலங்களுக்கு சமமாகவும், சமபங்கீடு செய்ய  வேண்டும் என வாதங்களை வைத்தார்.  கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு சமமான மாநிலங்களாக
இருக்கும்போது, அந்த நீதியை தீர்ப்பாயம் நீர்ப்பாசனத் தண்ணீரை ஒதுக்கீடு செய்யும் போது அங்கீகரிக்கவில்லை.

ஹெல்சின்கி விதிகள், 1966 இல் குறிப்பிடப்பட்ட பல்வேறு பொருந்தக்கூடிய காரணிகள் இரு மாநிலங்களுக்கிடையில் சமச்சீர் நிலையில் இருந்தும், அவை கண்டுகொள்ளப்படாமல் இருந்தன.

பிறகு, சமநிலை சமத்துவம், சமநிலை ஆகியவற்றின் அடிப்படையில், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் பங்குகளை  மற்றும் விரய நீரை (wastage) கழித்த பின்னர், மீதமுள்ள நீரினை கர்நாடகம்
மற்றும் தமிழ்நாட்டிற்கு சமமாக பிரிக்க வேண்டும்.  அவரது கணக்குப்படி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஒவ்வொன்றும் 339.5 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும்.

இவ்வாதத்திலிருந்து நாம் அறியவேண்டியது…..

மேற்படி வாதங்களை வைத்த ஃபாலி நாரிமன், 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தந்திற்கு அதிகமாக தீர்ப்பாயம் நீர் வழங்கிவிட்டதாக கூறியுள்ளது ஆதாரமற்றது. தீர்ப்பாயம் நீரை குறைத்துத் தான்
உத்தரவிட்டுள்ளது. 

சர்வதேச ஆற்று நீரை பயன்படுத்துவதில் ஹெல்சிங்கி விதிகள், அத்தியாயம்-II
(சர்வதேச படுகையிலுள்ள நியாயமான நீர்ப் பயன்பாடு) வடிகால் நாட்டின் நலனில் அக்கறை கொண்டுள்ளதை ஃபாலி நாரிமன் குறிப்பிடவில்லை.

நர்மதை நடுவர் மன்றம், கிருஷ்ணா நடுவர் மன்றம், கோதாவரி நடுவர் மன்றம்,
ரவி - பியாஸ் நடுவர் மன்றம், காவிரி நடுவர் மன்றம் தீர்ப்புகளை மேற்கோள் காட்டவில்லை.

சல்தானா தென் ஆப்பிரிக்க கடற்கரையில் அமைந்துள்ள சிறிய நகரம், தெற்கே அமைந்துள்ளது, கேப் டவுன் நகரத்திற்கு  90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள தண்ணீர் தட்டுபாட்டிற்கேற்ப
கட்டுப்பாட்டை கொண்டுள்ள சல்தானா குழுவின் அறிக்கையை இங்கே சமர்பித்தது ஏனோ?!

தொடரும்...

Tags : kaveri issue சட்டமணி காவிரித்தீர்ப்பு விவகாரம்

More from the section

தேர்தல் ஸ்பெஷல்-5 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைப்புத் தொகைகள் எவ்வளவு?
தேர்தல் ஸ்பெஷல்- 4 வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள், அவசியம் கவனிக்க வேண்டிய விதிகள்....
தேர்தல் ஸ்பெஷல் - 3 புதிய அரசியல் கட்சி தொடங்குவது எப்படி?
தேர்தல் ஸ்பெஷல் -2 பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?
தேர்தல் ஸ்பெஷல்-1 பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் என்னென்ன?