செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

சென்னை குடிநீர் வாரியத்தின் விளக்கம்...!

DIN | Published: 10th September 2018 03:15 AM

கடந்த 2.9.2018 தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் "கழிவுநீர் அடைப்பு புகார்களுக்கு பதிவு எண் வழங்க வேண்டும்'' என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
 சென்னை குடிநீர் வாரியம், நுகர்வோர்களின் கோரிக்கைகளை பல்வேறு கோணங்களில் பெறுகிறது.
 குறிப்பாக தலைமை அலுவலகத்தில் புகார் பிரிவில் புகார்கள் 4567, 2845, 4040 மற்றும் 1916- இலவச தொலைபேசி எண்கள் மூலம் பெறப்பட்டு, அவை ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு உடனடியாக புகார் பதிவு எண்கள் வழங்கப்படுகின்றன.
 மின்னஞ்சல் மூலமும் புகார்கள் பெறப்பட்டு அவையும் பதிவு செய்யப்படுவதுடன் அவற்றுக்கும் பதிவு எண் வழங்கப்படுகிறது. இதில் இடைத்தரகர்கள் நுழைய வாய்ப்பில்லை. புகார்கள் அனைத்தும் வரிசைப்படி அந்தந்த பகுதியில் மக்கள் சாசன விதிப்படி குறிப்பிடப்பட்டுள்ள நாள்களுக்குள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.
 -ஆர். நீலகண்டன்,
 மக்கள் தொடர்பு அலுவலர்,
 சென்னை குடிநீர் வாரியம்.

More from the section

பாராட்டு...!
பறக்கும் ரயில் பாதை பணி தேக்கம்
ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?
மைதானம் தேவை
சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?