20 ஜனவரி 2019

எம்மும் பெரிய ஹூமும்

DIN | Published: 10th September 2018 01:00 AM

எம்மும் பெரிய ஹூமும் - ஜெர்ரி பிண்டோ; தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி; பக்.288; ரூ.240; சாகித்திய அகாதெமி, 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
 2016 ஆம் ஆண்டின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆங்கில நாவலின் தமிழாக்கம் இந்நூல். இதுதவிர, கிராஸ் வேர்ட் புக் அவார்டு உட் பட பல விருதுகளை இந்நூல் பெற்றுள்ளது.
 மும்பையில் மாஹிம் பகுதியில் ஒரு படுக்கையறை உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளைச் சித்திரிப்பதே இந்நாவல்.
 எம் என்றழைக்கப்படும் தாய் மனநோய் உள்ளவள். அதன் காரணமாக மிகுந்த மகிழ்ச்சி அல்லது அதற்கு நேர் எதிரான தற்கொலை எண்ணம் என இரு நேர் எதிர் துருவங்களுக்கு இடையே வசிப்பவள். எம் - இன் கணவரான ஹூம் தனது வேலையில் மூழ்கிக் கிடப்பவர்.
 எம் - இன் மகன் தனது தாயின் நிலையை உன்னிப்பாக கவனித்து, அவள் அம்மாதிரியான மனநோய்க்கு ஆளாக, அவளுடைய கடந்த கால வாழ்க்கை காரணமாக இருக்குமோ என்று ஆராய்கிறான். தனது தாயும் தகப்பனும் எந்த அளவுக்கு ஒருவரையொருவர் நேசித்திருந்திருக்கிறார்கள்; நேசிக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரிய வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் - அதுவும் அவள் ஒரு தாயாக இருக்கும்போது - அந்தக் குடும்பம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக எந்த அளவுக்குப் போராட வேண்டியிருக்கிறது என்பதை மிகவும் உணர்வுப்பூர்வமாக இந்நாவல் சித்திரிக்கிறது. மொழிபெயர்ப்பு என்பது தெரியாத வண்ணம் நாவல் நம்மை அதன் போக்கில் இழுத்துச் செல்வதைத் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

More from the section

இலக்கியச் சங்கமம்
பாகிஸ்தான், (ஈரம் காயாத குருதிச் சரித்திரம்)
நேரா யோசி!
நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை?
கற்றது விசில் அளவு