புதன்கிழமை 20 மார்ச் 2019

121. அரனை உள்குவீர் - பாடல் 8

By என். வெங்கடேஸ்வரன்| DIN | Published: 22nd February 2019 12:00 AM

 

பாடல் 8:

    நறவம் ஆர் பொழில்
    புறவ நற்பதி
    இறைவன் நாமமே 
    மறவல் நெஞ்சமே

விளக்கம்:

தினமும் இறைவனின் புகழினைப் பாடி வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்று சென்ற பாடலில் நமக்கு அறிவுரை கூறிய சம்பந்தர், அதனை மீண்டும் வலியுறுத்தும் வண்ணம், இறைவனின் திருநாமத்தை மறவாது நமது நெஞ்சம் இருக்க வேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். நறவம்=தேன்; 
   
பொழிப்புரை:

தேன் நிறைந்த பூக்கள் உடைய பூஞ்சோலைகள் நிறைந்ததும், அடியார்களுக்கு பல நன்மைகளை விளைவிப்பதும், புறவம் என்று அழைக்கப் படுவதும் ஆகிய சீர்காழி தலத்தில் உறையும் இறைவனின் திருநாமங்களை, உலகத்தவரே, மறவாது உங்களது நெஞ்சத்தில் வைப்பீர்களாக.

 

More from the section

123. ஓர் உருவாயினை - பாடல் 39--47
123. ஓர் உருவாயினை - பாடல் 32--38
123. ஓர் உருவாயினை - பாடல் 25--31
123. ஓர் உருவாயினை - பாடல் 19--24
123. ஓர் உருவாயினை - பாடல் 14--19