திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

உலக பாட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

By Raghavendran| DIN | Published: 16th December 2018 12:12 PM

 

சீனாவில் நடைபெறும் உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார். இதன்மூலம் உலக பாட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றார். 

முன்னதாக, அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை 21-16, 25-23 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் சிந்து. இதன்மூலம் உலக டூர் ஃபைனல்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தொடர்ந்து 2-ஆவது முறையாக முன்னேறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் ஒகுஹராவிடம் பி.வி.சிந்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

More from the section

ஆஸி. ஓபன்: பெடரர் அதிர்ச்சித் தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன்: நடப்பு சாம்பியன் பெடரர், ஏஞ்சலீக் கெர்பர், ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி
ஐசிசி டுவிட்டர் கவர் பக்கத்தில் தோனி படம்
இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே காரணம்
தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி: தமிழகம் சாம்பியன்