24 மார்ச் 2019

'அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி': விராட் கோலிக்கு 'க்யூட்' பிறந்தநாள் வாழ்த்து 

DIN | Published: 05th November 2018 02:25 PM

 

மும்பை: 'அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி என்று விராட் கோலியின் பிறந்த நாளுக்கு அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோலி திங்களன்று தன்னுடைய முப்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இதற்காக அவரும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் ஹரித்வாருக்கு சென்றுள்ளார்கள். அங்குள்ள ஆஸ்ரமம் ஒன்றில் அவர்கள் பிறந்தநாளைக் கழிக்க விரும்புவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் 'அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி என்று விராட் கோலியின் பிறந்த நாளுக்கு அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரும் விராட் கோலியும் கட்டி அணைத்திருக்கும்  ஒரு அழகான படத்தை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவிற்கு தலைப்பாக மிகவும் எளிமையாக, ஆனால் காதல் ததும்பும் வகையில் 'அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி' என்று கூறியுள்ளார். 

எளிமையான ஆனால் க்யூட்டான அவரது இந்த வாழ்த்தினை அனைவரும் சிலாகித்துள்ளனர்.இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவரது படத்திற்கு விருப்பக் குறியீட்டு வாழ்த்தியுள்ளார்கள்.      

Tags : virat kohli anushka sharma birthday instagram photo caption cute wish

More from the section

தொடங்கியது ஐபிஎல் 2019: பெங்களூருவை நொறுக்கியது சென்னை
ஹைதராபாத்}கொல்கத்தா, மும்பை}தில்லி அணிகள் இன்று மோதல்
2020 டி20 உலகக் கோப்பைக்கு பின் ஓய்வு
மியாமி ஓபன்: ஜோகோவிச், ஒஸாகா முன்னேற்றம்
சிஆர்பிஎப் மற்றும் முப்படைகளுக்கு ரூ.20 கோடி நிதி: பிசிசிஐ வழங்கியது