புதன்கிழமை 16 ஜனவரி 2019

கே.எல். ராகுல் சதம்: வெற்றியை நெருங்கும் இங்கிலாந்து அணி!

By எழில்| DIN | Published: 11th September 2018 05:47 PM

 

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் தொடக்க வீரர் கேஎல் ராகுல் சதமடித்துள்ளார்.

5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-1 என இங்கிலாந்து ஏற்கெனவே கைப்பற்றி விட்டது. இறுதி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கும், இந்தியா 292 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின.

இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 364 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் வீரர்கள் அலிஸ்டர் குக் 147, கேப்டன் ஜோ ரூட் 125 ஆகியோர் அபாரமாக ஆடி சதமடித்தனர். இதன் மூலம் இந்தியாவைக் காட்டிலும் 464 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்களை எடுத்தது. தவன் 1, புஜாரா, கோலி 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ராகுல் 46, ரஹானே 10 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இறுதி நாளான இன்று இந்திய அணி வெற்றி பெற 406 ரன்கள் தேவைப்பட்டன. 

முதல் ஒரு மணி நேரம் ராகுலும் ரஹானேவும் தாக்குப்பிடித்து ஆடினார்கள். 179 பந்துகளில் இந்தக் கூட்டணி 100 ரன்களைத் தொட்டது. எனினும் 106 பந்துகள் விளையாடி 37 ரன்கள் எடுத்த ரஹானே இறுதியில் மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார் அறிமுக வீரர், விஹாரி. இங்கிலாந்து பந்துவீச்சை இந்தமுறை சிறப்பாக எதிர்கொண்ட தொடக்க வீரர் கேஎல் ராகுல், 118 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் சதத்தை எட்டினார். 

கடைசி நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 45 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 108, ரிஷப் பண்ட் 12 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இன்னமும் 5 விக்கெட்டுகளே மீதமுள்ள நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு 297 ரன்கள் தேவைப்படுகிறது. 
 

Tags : century KL rahul ENGvIND

More from the section

'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி
சதமடித்த விராட் கோலி படைத்த சாதனை!
மார்ஷ் அதிரடி சதம்: வெற்றிக்கு மல்லுக்கட்டும் இந்தியா
2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு
2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணி பேட்டிங்