செவ்வாய்க்கிழமை 19 மார்ச் 2019

ஜப்பான் ஓபன்: இரண்டாம் சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த், பிரணாய்

DIN | Published: 12th September 2018 01:09 AM


ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டி இரண்டாம் சுற்றுக்கு இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, கே.ஸ்ரீகாந்த், பிரணாய் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை சயாகா டகாஷியை 21-17, 7-21, 21-13 என்ற ஆட்டக்கணக்கில் வீழ்த்தினார் சிந்து. 
ஆடவர் பிரிவில் ஸ்ரீகாந்த் 21-13, 21-15 என சீனாவின் ஹுவாங்கை வென்றார். ஆசியப் போட்டி தங்க பதக்கம் வென்றவரான இந்தோனேஷிய வீரர் ஜோனாத்தன் கிறிஸ்டி 21-18, 21-17 என்ற ஆட்டக்கணக்கில் இந்தியாவின் பிரணாயிடம் அதிர்ச்சித் தோல்வியுற்றார். சமீர் வர்மா, ஜக்காரெட்டி ஆகியோர் ஒற்றையர் பிரிவில் தோல்வியுற்றனர். இரட்டையர் பிரிவில் பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி இணை அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ரங்கிரெட்டி-அஸ்வினி இணை தோல்வியுற்றது.

More from the section

ஐபிஎல் லீக் சுற்று போட்டிகளின் முழு அட்டவணை
ஐபிஎல் வழியாக உலகக் கோப்பை வாய்ப்பைக் குறி வைக்கும் இளம் வீரர்!
பாதுகாப்பை மீறி தோனியை சந்திக்க  முயன்ற இளைஞருக்கு போலீஸார் எச்சரிக்கை
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஏதுவாக ஆசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவில்லை
ஐபிஎல் 2019: கடந்த சீசனைப் போலவே தற்போதும் அச்சமின்றி விளையாடுவோம்- ஹர்பஜன் சிங்