புதன்கிழமை 16 ஜனவரி 2019

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது இந்தியா

DIN | Published: 12th September 2018 01:07 AM
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் மந்தானா (73).


ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியா நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒரு நாள் ஆட்டத்தில் இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. ஸ்மிருதி மந்தானா அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் 73 ரன்களை குவித்தார்.
3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுவதற்காக இந்திய மகளிரணி இலங்கை சென்றுள்ளது. காலேயில் முதல் ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
முதலில் ஆடிய இலங்கை அணி 98 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது (சமாரி அட்டப்பட்டு 33, திலானி மனோதாரா 12, சிரிபாலி வீரக்கொடி 26). மான்சி 3-16, ஜுலான் கோஸ்வாமி 2-13.
பின்னர் ஆடிய இந்திய அணி 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. 
ஸ்மிருதி மந்தானா அபாரமாக ஆடி 73 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவரது 12-ஆவது அரை சதமாகும். புனம் ரவுட் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் பட்டியலில் 5-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. 13-ஆம் தேதி இரண்டாவது ஆட்டம் நடக்கிறது. 

More from the section

ஐசிசி அமைப்பின் அடுத்த தலைமைச் செயல் அதிகாரியின் பெயர் அறிவிப்பு
'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி
சதமடித்த விராட் கோலி படைத்த சாதனை!
மார்ஷ் அதிரடி சதம்: வெற்றிக்கு மல்லுக்கட்டும் இந்தியா
2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு