வியாழக்கிழமை 17 ஜனவரி 2019

மீண்டும் மறுபிறவி: மாரடோனா

DIN | Published: 12th September 2018 01:05 AM


மெக்ஸிகோவில் இரண்டாம் கால்பந்து டிவிஷன் கிளப் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மாரடோனா இது தனக்கு மீண்டும் மறுபிறப்பு எனக்கூறியுள்ளார்.
ஆர்ஜென்டீனா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட மாரடோனா தலைமையின் கீழ் அந்த அணி சரியாக சோபிக்கவில்லை. இந்நிலையில் மெக்ஸிகோவின் இரண்டாம் டிவிஷன் கிளப்பான டோரடாஸ்க்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியது: நான் போதை மருந்து பழக்கம், மன அழுத்தம், போன்றவற்றால் 14 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்தேன். பல இரவுகள் தூங்கியதே இல்லை. தற்போது டோரடாஸ் கிளப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது எனது மறுபிறப்பு போன்றதாகும் என்றார்.
 

More from the section

2-ஆவது ஒரு நாள் ஆட்டம்: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
மலேசிய பாட்மிண்டன்: ஸ்ரீகாந்த், காஷ்யப், சாய்னா வெற்றி
பதவி விலகினார் இந்திய கால்பந்து அணி பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன்
ஐசிசி புதிய தலைமை செயல் அலுவலர் மானு சாஹ்னி
உலகின் இரண்டாம் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்