செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

வெளிநாட்டுக்கு இடம் மாறுகிறதா 2019 ஐபில் போட்டிகள்? 

DNS | Published: 12th September 2018 07:46 PM

 

புது தில்லி: மக்களவைத் தோ்தல் எதிரொலியாக வரும் ஐபிஎல் 2019 போட்டிகள் வெளிநாட்டுக்கு இடம் மாற வாய்ப்புள்ளது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் கடந்த 2008-இல் இந்திய பிரீமியா் லீக் என்ற பெயரில் டி 20 கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்டன. இதில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. தொடா்ந்து வெற்றிகரமாக போட்டிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இவை இந்தியாவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன பிசிசிஐ-க்கு இதனால் கணிசமான வருவாய் கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். கடந்த 2009-இல் மக்களவைத் தோ்தல் நடந்ததால் போதிய பாதுகாப்பு வழங்க இயலாது என மத்திய அரசு கூறியதால், ஐபிஎல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. 2014-இல் தோ்தலை முன்னிட்டு ஐக்கிய அரபு நாடுகளுக்கு மாற்றறப்பட்டது.

இந்நிலையில் வரும் 2019-இல் மக்களவை தோ்தல் நடக்கவுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகளின் ஒரு பகுதி அல்லது முழுமையாக இடம் மாற்றறப்படும் எனத் தெரிகிறறது. இந்நிலையில் இந்திய தோ்தல் ஆணையம் மக்களவை தோ்தல் தேதிகளை அறிவிப்பது குறித்து பிசிசிஐ எதிா்நோக்கி உள்ளது.

தோ்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டால், ஐபிஎல் போட்டிகளை தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் அல்லது இங்கிலாந்தில் நடத்துவதா என பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. ஐக்கிய அரபு நாடுகளில் 3 மைதானங்களே உள்ள நிலையில் அங்கு போட்டியை நடத்துவதில் சிரமம் ஏற்படும். இதனால் தென்னாப்பிரிக்காவே ஐபிஎல் 2019 போட்டியை நடத்துவதற்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Tags : BCCI IPL elections south africa UAE transfer england

More from the section

இன்னும் 100 நாள்கள்: ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 2019
இந்திய அணியை சமாளிக்க செயல்திட்டம் : ஆரோன் பின்ச்
மாப்பேயின் கோலால் பிஎஸ்ஜி வெற்றி
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: ரயில்வே சாம்பியன்
உலகக் கோப்பை கிரிக்கெட்: நான்காம் நிலை பேட்ஸ்மேனாக கோலி களமிறங்க வாய்ப்பு