செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

விஜய் ஹசாரே போட்டிக்காக தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குத் தேர்வான சேலம் கல்லூரி மாணவர்!

By எழில்| DIN | Published: 12th September 2018 04:13 PM

 

விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் பங்குபெறுகிற தமிழக அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேலத்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளரும் கல்லூரி மாணவருமான எஸ். ஷருண் குமார் தேர்வாகியுள்ளார். 

20 வயது ஷருண் குமார், சேலத்தில் மூன்றாம் வருட இன்ஜினியரிங் கல்லூரி மாணவர். சமீபத்தில் நடைபெற்ற விஏபி போட்டியில் இந்தியா பிஸ்டன்ஸ் சார்பாக 25 விக்கெட்டுகளை எடுத்தார். இதன்மூலம் கவனம் கிடைத்த ஷருண் தற்போது தமிழக அணிக்குத் தேர்வாகியுள்ளார். ஷருணின் தந்தை செந்தில்மணியன், சேலம் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர். தொடர்ந்து கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த முடியாத காரணத்தால் தன் மகன் கிரிக்கெட்டில் ஈடுபட ஊக்கம் அளித்துள்ளார். அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது. 

தமிழக அணியில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய், அஸ்வின் ஆகியோர் இடம்பெறவில்லை. கே. விக்னேஷ், டி. நடராஜன், எம். முகமது, ஷருண் குமார் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாகத் தேர்வாகியுள்ளார்கள். டிஎன்பிஎல் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி கவனம் ஈர்த்த சுழற்பந்துவீச்சாளர் சி.வி. அருணும் தேர்வாகியுள்ளார்.

செப்டம்பர் 19 முதல் விஜய் ஹசாரே போட்டி தொடங்குகிறது. செப்டம்பர் 20 அன்று தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத்தை எதிர்கொள்கிறது. 

தமிழக அணி: விஜய் சங்கர் (கேப்டன்), அபினவ் முகுந்த், பாபா இந்திரஜித், பாபா அபரஜித், எம். கெளசிக் காந்தி, அனிருத், ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ரஹில் ஷா, சாய் கிஷோர், சிவி அருண், எம். முகமது, கே. விக்னேஷ், டி. நடராஜன், ஷருண் குமார்.

More from the section

இந்தியா, நியூஸிலாந்து இடையே நாளை முதல் ஒருநாள்
அறிமுக ஆண்டிலேயே ஐசிசி விருது: அசத்தும் ரிஷப் பண்ட்
2018-ஆம் ஆண்டின் அணிகளை வழிநடத்தும் விராட் கோலி: இடம்பிடித்தவர்கள் யார்-யார்?
2018-ல் என் நினைவில் நின்றவை: ஐசிசி விருதுகள் குறித்து மனம் திறந்த விராட் கோலி
'ஹாட்ரிக் ஹீரோ'- ஒரே ஆண்டில் 3 ஐசிசி விருதுகளை வென்று விராட் கோலி புது சாதனை!