வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

உலகக் கோப்பை ஹாக்கி: தேசிய பயிற்சி முகாமுக்கு 25 பேர் தேர்வு

DIN | Published: 13th September 2018 01:02 AM


ஓடிசாவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள உள்ள ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி சாம்பியன் போட்டிக்கான தேசிய பயிற்சி முகாமுக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஜகார்த்தா ஆசியப் போட்டிக்கு நடப்பு சாம்பியனாக சென்ற இந்திய அணி தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சித் தோல்விகளை சந்தித்து வெறும் வெண்கலப் பதக்கத்துடன் மட்டுமே நாடு திரும்பியது. இந்நிலையில் விரைவில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை, உலகக் கோப்பை போட்டிகள் நடக்கின்றன. இதற்கு அணியை மீண்டும் தயார்படுத்தும் வகையிலும், வெற்றிப்பாதைக்கு திருப்பும் வகையிலும் ஹாக்கி இந்தியா தீவிர முயற்சி எடுத்துள்ளது.
அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் இதுதொடர்பாக கூறியதாவது:
ஆசியப் போட்டியில் வெண்கலம் வென்றது ஆறுதலைத் தந்தாலும், இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறாதது மன்னிக்க முடியாததாகும். தோல்வியால் துவண்டு விடாமல் எதிர்கால போட்டிகளுக்கு புதிய உத்வேகத்துடன் தயாராக வேண்டியுள்ளது. உலகக் கோப்பைக்காக புவனேஸ்வரத்தில் தேசிய பயிற்சி முகாம் 16-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக 25 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக கலிங்கா ஹாக்கி மைதானத்தில் பயிற்சி பெறுவது அணிக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான உத்திகள் தேசிய பயிற்சி முகாமில் வகுக்கப்படும். பார்வர்ட்கள் சுனில், அக்ஷதீப் சிங், குர்ஜன்த் சிங், மந்தீப், தில்பீரித் சிங், சுமித் குமார், ஸ்ட்ரைக்கர் ராமன்தீப் சிங், பிரேந்திர லக்ரா ஆகியோரும் இடம் பெறுகின்றனர். வரும் அக்.14-ஆம் தேதி வரை பயிற்சி முகாம் நடக்கிறது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி அக்டோபர் 18-இல் மஸ்கட்டில் தொடங்குகிறது.

 

More from the section

புரோ வாலிபால்: முதல் சாம்பியன் ஆகப்போவது சென்னையா இல்லை காலிக்கட்டா?: இன்று இறுதி ஆட்டம்
முதல் ஒரு நாள் மே.இ.தீவுகளை வீழ்த்தியது இங்கிலாந்து 
ஆஸி.  தொடர்: காயமுற்ற பாண்டியாவுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்ப்பு
சாம்பியன்ஸ் லீக்: அதலெட்டிகோ மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி வெற்றி
இலங்கை கிரிக்கெட் வாரிய புதிய தலைவரானார் ஷம்மி சிவா