புதன்கிழமை 23 ஜனவரி 2019

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தில் இந்திய அணி- கோலி தொடர்ந்து முதலிடம்

DIN | Published: 13th September 2018 01:03 AM


இங்கிலாந்துடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 4-1 என இழந்த போதும் ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசைப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 4-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கேப்டன் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 125 புள்ளிகளுடன் இந்தியா ஏற்கெனவே முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என இந்தியா இழந்து விட்டது. தற்போது படுதோல்வியடைந்த நிலையியிலும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது இந்திய அணி. ஆனால் புள்ளிகள் 115 ஆக சரிந்து விட்டது.
அதே நேரத்தில் இங்கிலாந்து அணி 97 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் இருந்தது. தற்போது அபார வெற்றியின் மூலம் 8 புள்ளிகள் அதிகரித்து 105 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்கா 2-ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
விரோட் கோலி முதலிடம்:
அதே நேரத்தில் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து தொடரில் அவர் 59.3 சராசரியுடன் மொத்தம் 593 ரன்களை குவித்தார். டிரெண்ட்பிரிட்ஜ் டெஸ்ட் ஆட்டத்தில் கோலி மீண்டும் முதலிடம் பெற்றார். வரும் அக்டோபர் மாதம் மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் ஆட்டங்கள் மூலம் தொடர்ந்து முதலிடத்தை அவர் தக்க வைத்துக் கொள்வார் எனக்கருதப்படுகிறது.
லோகேஷ் ராகுல், ரிஷப் பந்து ஆகியோர் அபார ஆட்டத்தால் முறையே 19-ஆவது இடத்துக்கும், 111-ஆவது இடத்தில் இருந்து 63-ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். ஜடேஜா பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 58-ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் அலிஸ்டர் குக் 3-ஆவது இடத்தில் உள்ளார். ஜோ ரூட் 4-ஆவது இடத்துக்கு முன்னேறினார். ஜோஸ் பட்லர் 23, மொயின் அலி 43-ஆவது இடங்களுக்கு முன்னேறினர்.
பெளலர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். 903 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். ஸ்டோக்ஸ் 27, அடில் ரஷீத் 44, சாம் கரன் 51-ஆவது இடங்களுக்கு முன்னேறி உள்ளனர்.

 

More from the section

ஓரே நேரத்​தில் 3 ஐசிசி விரு​து​கள்: வர​லாறு படைத்​தார் கிங் கோலி முதல் வீரர் என்ற சாத​னை​யை​யும் படைத்​தார்
நியூ​ஸி​லாந்​து-​இந்​தியா இடையே இன்று முதல் ஒரு நாள் ஆட்டம்
ஆஸ்​தி​ரே​லிய ஓபன்: அரை​யி​று​தி​யில் நடால், சிட்ஸி​பாஸ், குவிட்​டோவா, காலின்ஸ்
ரொனால்​டோ​வுக்கு ரூ.152 கோடி அப​ரா​தம்
ஐசிசி ஆண்​டின் டெஸ்ட், ஒரு நாள் அணி​கள் கேப்​ட​னாக கோலி தேர்வு