சனிக்கிழமை 23 மார்ச் 2019

என்னுடைய திட்டங்கள் சரியாக செயல்படுகின்றன: டெஸ்ட் கிரிக்கெட் அனுபவத்தை பகிர்ந்த ரிஷப் பண்ட்

DIN | Published: 19th February 2019 06:26 PM

 

என்னுடைய திட்டங்கள் சரியாக செயல்படுகின்றன, எனவே எனது ஆட்டத்திறன் சிறப்பாக அமைகிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் என்னுடைய திட்டங்கள் சரியாக செயல்படுகின்றன. எனவே எனது ஆட்டத்திறன் மிகவும் சிறப்பாக அமைகிறது. எனவே நான் எனது செயல்பாடுகள் குறித்த திட்டமிடல்களில் மட்டுமே ஈடுபடுகிறேன். அதனால் என்னுடைய ஆட்டம் சரியாக அமைகிறதா அல்லது தவறாகிறதா என்பது குறித்து எல்லாம் கவலைப்படுவதில்லை.

அதேபோன்று பேட்டிங், விக்கெட் கீப்பிங் என இரண்டுக்கும் சரியான நேரம் ஒதுக்கி திட்டமிட்டு பயிற்சி மேற்கொள்கிறேன். ஒவ்வொரு ஆட்டத்தின் முன்னதாக, அதில் செய்ய வேண்டியதை குறித்தும் திட்டமிட்டுக்கொள்வேன். 

தற்போது பெரும்பாலான பந்துவீச்சாளர்களை ஐபிஎல் போட்டிகளில் எதிர்கொள்வதால், அதில் பெரிய சிக்கல் எழுவதில்லை. இங்கிலாந்தில் பந்து சற்று அதிகளவில் ஸ்விங் ஆகும். இருப்பினும் நான் அறிமுகவாதற்கு முன்பே இந்திய ஏ அணியில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியதால், இங்கிலாந்து ஆடுகளங்கள் குறித்து ஒரளவு தெளிவு ஏற்பட்டது.

எதிரணிக்கு கடுமையான சவால் அளிப்பதை நான் விரும்புகிறேன். வரம்பு மீறாத வாய் தகராறுகளில் ஈடுபடுவதை மட்டுமே ஈடுபடுகிறேன். அதில் யாரையும் புண்படுத்தும் விதமான ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியது கிடையாது. இவையெல்லாம் எதிரணி வீரர்களின் மனநிலையுடன் விளையாடும் ஒரு விளையாட்டு தான் என்றார். 

More from the section

டெஸ்ட் சீருடையில் பெயர், எண் பொறிக்க ஐசிசி அனுமதி
கம்பீர் கருத்து: கோலி பதிலடி
யூரோ 2020 தகுதிச் சுற்று: பெல்ஜியம், நெதர்லாந்து வெற்றி
ஐபிஎல் 2019 திருவிழா இன்று தொடக்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதல்- தோனி-கோலி பலப்பரீட்சை
சிஎஸ்கே-ராஜஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை 26-இல் தொடக்கம்