சனிக்கிழமை 23 மார்ச் 2019

ஆஸி.  தொடர்: காயமுற்ற பாண்டியாவுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்ப்பு

DIN | Published: 22nd February 2019 01:03 AM


ஆஸ்திரேலிய அணியுடன் ஒரு நாள் மற்றும் டி20 தொடர் நடக்கவுள்ள நிலையில் காயமுற்ற ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் 5 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் ஆஸி. அணி பங்கேற்கிறது. முதல் டி20 ஆட்டம் 24-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
தனியார் தொலைக்காட்சியில் பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துகள் கூறியதால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாண்டியா பின்னர் நியூஸிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரில் இடம் பெற்று சிறப்பாக ஆடினார். அவருடன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கே.எல். ராகுலும் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் முதுகில் கடும் பிடிப்பு காரணமாக காயமுற்றுள்ள பாண்டியாவால், ஆஸி.தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவை தந்துள்ளது. அவருக்கு பதிலாக ஒரு நாள் தொடரில் ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஒரு நாள் ஆட்டம் மார்ச் 2-இல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது.
 

More from the section

ஐபிஎல் 2019 திருவிழா இன்று தொடக்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதல்- தோனி-கோலி பலப்பரீட்சை
சிஎஸ்கே-ராஜஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை 26-இல் தொடக்கம்
மியாமி டென்னிஸ்: வீனஸ் முன்னேற்றம்
டி10: 25 பந்துகளில் சதமடித்த சர்ரே வீரர் வில் ஜேக்ஸ்
பிரெஞ்சு ஓபன் 2019: பரிசுத் தொகை உயர்வு