சனிக்கிழமை 23 மார்ச் 2019

சாம்பியன்ஸ் லீக்: அதலெட்டிகோ மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி வெற்றி

DIN | Published: 22nd February 2019 01:02 AM
கோலடிக்கும் முயற்சியில் அதலெட்டிகோ மாட்ரிட் அணியினர்.


சாம்பியன்ஸ் லீக் போட்டி ரவுண்ட் 16 சுற்றின் ஒரு பகுதியாக புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டங்களில் அதலெட்டிக்கோ மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி பெற்றன.
இத்தாலி சீரி ஏ சாம்பியனான ஜூவென்டஸில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பெற்ற நிலையில், சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் அந்த அணி, அதலெட்டிக்கோ மாட்ரிட்டை எதிர் கொண்டது. தொடக்கம் முதலே இரு அணிகளும் மாறி மாறி கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. முதல் பாதியில் எந்த அணியும் கோலடிக்கவில்லை.
இரண்டாம் பாதியில் மாட்ரிட் அணி தனது ஆட்டத்தை தீவிரப்படுத்தியதால், 78-ஆம் நிமிடத்தில் அதன் வீரர் ஜோஸ் ஜிம்மென்ஸ் முதல் கோலை அடித்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே 83-ஆவது நிமிடத்தில் டீகோ கோடின் இரண்டாவது மற்றும் வெற்றி கோலை அடித்தார்.
ஆட்டம் பெரும்பாலும் ஜுவென்டஸ் கட்டுப்பாட்டிலேயே இருந்த போதிலும் அந்த அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
23 ஆண்டுகளாக சாம்பியன்ஸ் லீக் பட்டம் வெல்ல ஜுவென்டஸ் காத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டர் சிட்டி வெற்றி
ஜெர்மனியின் ஜெல்சென்கிர்செனில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் சிட்டியும்-சால்கே அணியும் மோதின.இதில் முதல் கோலை சிட்டி வீரர் செர்ஜிúô அகியுரோ பெற்றுத் தந்தார். எனினும் சால்கே அணி தரப்பில் நேபில் பென்டலப் 38, 45-ஆவது நிமிடங்களில் கோலடித்து 2-1 என முன்னிலை பெற்று தந்தார்.
தோல்வியின் விளிம்பில் இருந்த மான்செஸ்டர் அணி, இறுதிக் கட்டத்தில் மீண்டு எழுந்தது. 85-ஆவது நிமிடத்தில் லெராய் சேன் இரண்டாவது கோலை அடித்து 2-2 என சமநிலை ஏற்படச் செய்தார். ஆட்டம் முடிய சிறிது நேரமே இருந்த நிலையில் 90-ஆவது நிமிடத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் வெற்றிக் கோலை அடித்தார். இறுதியில் 3-2 என சிட்டி அணி வென்றது.


 

More from the section

டெஸ்ட் சீருடையில் பெயர், எண் பொறிக்க ஐசிசி அனுமதி
கம்பீர் கருத்து: கோலி பதிலடி
யூரோ 2020 தகுதிச் சுற்று: பெல்ஜியம், நெதர்லாந்து வெற்றி
ஐபிஎல் 2019 திருவிழா இன்று தொடக்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதல்- தோனி-கோலி பலப்பரீட்சை
சிஎஸ்கே-ராஜஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை 26-இல் தொடக்கம்