சனிக்கிழமை 23 மார்ச் 2019

புரோ வாலிபால்: முதல் சாம்பியன் ஆகப்போவது சென்னையா இல்லை காலிக்கட்டா?: இன்று இறுதி ஆட்டம்

DIN | Published: 22nd February 2019 02:39 AM


புரோ வாலிபால் லீகின் முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது சென்னை ஸ்பார்டனஸா அல்லது காலிக்கட் ஹீரோஸ் அணியா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொச்சியில் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் பிவிஎல் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகின்றன.
நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு சென்னை-காலிக்கட் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
காலிக்கட் ஹீரோஸ் அணி இதுவரை ஓர் ஆட்டத்தில் கூட தோற்கவில்லை. அரையிறுதியில் யு மும்பா அணியை எளிதாக வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.
அதே வேளையில் சென்னை அணி அரையிறுதிக்குள் நுழைய கடும் முயற்சி மேற்கண்டே வந்தது. கொச்சி அணியிடம் 1-2 என அரையிறுதியில் பின்தங்கி இருந்து அதில் மீண்டெழுந்தது சென்னை, 
இந்நிலையில் இரு அணிகள் மோதும் இறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு 6.50 மணிக்கு நடைபெறுகிறது.
 

More from the section

ஐபிஎல் 2019 திருவிழா இன்று தொடக்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதல்- தோனி-கோலி பலப்பரீட்சை
சிஎஸ்கே-ராஜஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை 26-இல் தொடக்கம்
மியாமி டென்னிஸ்: வீனஸ் முன்னேற்றம்
டி10: 25 பந்துகளில் சதமடித்த சர்ரே வீரர் வில் ஜேக்ஸ்
பிரெஞ்சு ஓபன் 2019: பரிசுத் தொகை உயர்வு