24 மார்ச் 2019

துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!

By எழில்| DIN | Published: 23rd February 2019 03:03 PM

 

துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டேலா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

புதுதில்லியில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வரும் 2020 டோக்கியா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான 16 இடங்கள் உள்ளன. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இன்று நடைபெற்ற மகளிர் 10 மீ. ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் 26 வயது அபூர்வி சண்டேலா தங்கம் வென்று அசத்தினார். இறுதிச்சுற்றில் 252.9 புள்ளிகளை அடைந்து புதிய உலக சாதனையையும் அவர் படைத்தார். 

Tags : ISSFWorldCup Chandela

More from the section

தொடங்கியது ஐபிஎல் 2019: பெங்களூருவை நொறுக்கியது சென்னை
ஹைதராபாத்}கொல்கத்தா, மும்பை}தில்லி அணிகள் இன்று மோதல்
2020 டி20 உலகக் கோப்பைக்கு பின் ஓய்வு
மியாமி ஓபன்: ஜோகோவிச், ஒஸாகா முன்னேற்றம்
சிஆர்பிஎப் மற்றும் முப்படைகளுக்கு ரூ.20 கோடி நிதி: பிசிசிஐ வழங்கியது