திங்கள்கிழமை 25 மார்ச் 2019

இந்தியா vs பாகிஸ்தான் மோதல்: அரசின் முடிவுக்குத் துணை நிற்போம் என விராட் கோலி அறிவிப்பு

By எழில்| DIN | Published: 23rd February 2019 12:24 PM

 

கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறன. புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளது பிசிசிஐ. 

2019 உலகக் கோப்பைப் போட்டியில் ஜுன் 16 அன்று இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் சமீபத்திய காஷ்மீர் தற்கொலைப்படைத் தாக்குதலையடுத்து இந்த ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அரசின் முடிவைப் பொறுத்தே இந்த ஆட்டம் நடைபெறுமா இல்லையா என்று சொல்லமுடியும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலியிடம் கேட்கப்பட்டது. அவர் அளித்த பதில்:

புல்வாமா தாக்குதலில் இறந்த ராணுவ வீரர்களுக்கு எங்களுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாடும் பிசிசிஐ அமைப்பும் என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு நாங்கள் துணை நிற்போம். அவர்களின் முடிவுக்கு நாங்கள் மதிப்பளிப்போம் என்று கூறியுள்ளார்.

Tags : Virat Kohli India-Pakistan World Cup clash

More from the section

ஐபிஎல் 2019: ஹைதராபாத்தை சாய்த்தது கொல்கத்தா
பெங்களூருவை நொறுக்கியது சென்னை
மும்பையை 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தில்லி
ராஜஸ்தான்-பஞ்சாப் இன்று மோதல்
யூரோ 2020:ஸ்பெயின், இத்தாலி வெற்றி