சனிக்கிழமை 23 மார்ச் 2019

ஹெட்மையர் 104, காட்ரெல் 5 விக்கெட்டுகள்: 2-வது ஒருநாள் ஆட்டத்தில் அட்டகாசமாக வெற்றியடைந்த மே.இ. அணி!

By எழில்| DIN | Published: 23rd February 2019 10:36 AM

 

முதல் ஒருநாள் ஆட்டத்தில் தோல்வியடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2-வது ஒருநாள் ஆட்டத்தில் அட்டகாசமாக விளையாடி, 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 

பிரிட்ஜ்டெளனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. கெய்ல் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஹெட்மையர் 83 பந்துகளில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்தார். 

முதல் ஒருநாள் ஆட்டத்தில் மே.இ. அணியின் 360 ரன்களை எளிதாக விரட்டிய இங்கிலாந்து அணியால் நேற்று 290 ரன்களை எடுக்கமுடியாதபடி வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் அசத்தலாகப் பந்துவீசினார். ராய் 2 ரன்களிலும் பேர்ஸ்டோவ் ரன் எடுக்காமலும் அவருடைய பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். மார்கன் 70, ஸ்டோக்ஸ் 79 ரன்கள் எடுத்தும் இங்கிலாந்து அணியால் இலக்கை அடையமுடியாமல் போனது. இங்கிலாந்து அணி, 47.4 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காட்ரெல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட மே.இ. அணி தொடரை 1-1 என சமநிலைக்குக் கொண்டுவந்துள்ளது. 3-வது ஒருநாள் ஆட்டம், திங்களன்று நடைபெறவுள்ளது.

Tags : West Indies England tour of West Indies

More from the section

ஐபிஎல் போட்டி: தொலைக்காட்சி வர்ணனையாளராக அறிமுகம் ஆகும் மனோஜ் திவாரி!
ஐபிஎல்: சாம்பியன்களும் கொண்டாட்டங்களும்! (படங்கள்)
8 ஐபிஎல் அணிகளும் 11 ஐபிஎல் போட்டிகளும்: முழு அலசல்!
குறைந்த ஐபிஎல் ஆட்டங்கள், 3 மாடங்களின் பிரச்னைகள்: பரிதாபமான சென்னை சேப்பாக்கம் மைதானமும் சிஎஸ்கே ரசிகர்களும்!
சென்னையில் சிஎஸ்கேவை ஆர்சிபி அணி கடைசியாக எப்போது தோற்கடித்தது என்று தெரியுமா?