24 மார்ச் 2019

தோனியின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பந்த்: ஐசிசி தரவரிசையில் அதிகப் புள்ளிகளுடன் முன்னேற்றம்!

By எழில்| DIN | Published: 08th January 2019 03:36 PM

 

ஒரு டெஸ்ட் தொடரில் அதிக கேட்சுகள் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்கிற சாதனையை ஆஸிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிகழ்த்திய ரிஷப் பந்த், தற்போது ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் அதிகப் புள்ளிகள் பெற்று மற்றொரு சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

சிட்னி டெஸ்டில் சதமடித்த ரிஷப் பந்த், ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 673 புள்ளிகளைப் பெற்று 17-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன்பு தோனி 662 புள்ளிகள் பெற்றிருந்ததே ஒரு இந்திய விக்கெட் கீப்பர் ஐசிசி ரேட்டிங்கில் பெற்ற அதிகப் புள்ளிகளாக இருந்தன. அதை முறியடித்துள்ளார் ரிஷப் பந்த். மேலும் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் அவர் 17-ம் இடத்தைப் பிடித்துள்ளார். 1973-ல் ஃபரூக் இன்ஜினியரும் 17-ம் இடத்தைப் பிடித்தார். 

ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் புஜாரா மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் தொடரில் அவர் 521 ரன்கள் எடுத்து அசத்தினார். 

Tags : ICC Test Rankings Rishabh Pant MS Dhoni

More from the section

தொடங்கியது ஐபிஎல் 2019: பெங்களூருவை நொறுக்கியது சென்னை
ஹைதராபாத்}கொல்கத்தா, மும்பை}தில்லி அணிகள் இன்று மோதல்
2020 டி20 உலகக் கோப்பைக்கு பின் ஓய்வு
மியாமி ஓபன்: ஜோகோவிச், ஒஸாகா முன்னேற்றம்
சிஆர்பிஎப் மற்றும் முப்படைகளுக்கு ரூ.20 கோடி நிதி: பிசிசிஐ வழங்கியது