செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

10 ஆண்டுகளில் ஆஸி. ஓபன் காலிறுதிக்கு முதன்முறையாக முன்னேறிய ஆஸி. வீராங்கனை!

By Raghavendran| DIN | Published: 20th January 2019 11:00 AM

 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி தகுதி பெற்றார்.

மிகவும் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், ரஷியா முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி இடையிலான 4-ஆவது சுற்றுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் செட்டை 4-6 என ஷரபோவா கைப்பற்றினார். பின்னர் சுதாரித்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஷ்லி, 6-1, 6-4 என அடுத்த இரு செட்களையும் கைப்பற்றி வெற்றிபெற்றார்.

இதன்மூலம் ஆஸி. ஓபனில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் ஆஸி. வீராங்கனை என்ற சாதனையை ஆஷ்லி படைத்தார். இதையடுத்து காலிறுதிப் போட்டியில் மற்றொரு முன்னணி வீராங்கனையான பெட்ரா க்விடோவாவை எதிர்கொள்கிறார்.

Tags : AusOpen Ashleigh Barty Maria Sharapova

More from the section

ஐபிஎல் 2019 முதல் இரு வாரங்களுக்கான அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் ஆர்சிபி-யை எதிர்கொள்கிறது சிஎஸ்கே!
என்னுடைய திட்டங்கள் சரியாக செயல்படுகின்றன: டெஸ்ட் கிரிக்கெட் அனுபவத்தை பகிர்ந்த ரிஷப் பண்ட்
இன்னும் 100 நாள்கள்: ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 2019
இந்திய அணியை சமாளிக்க செயல்திட்டம் : ஆரோன் பின்ச்
மாப்பேயின் கோலால் பிஎஸ்ஜி வெற்றி