வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

ஆஸி. ஓபன்: பெடரர் அதிர்ச்சித் தோல்வி

DIN | Published: 21st January 2019 05:32 AM

மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸி. ஓபன் நான்காம் சுற்று ஆட்டம் ஒன்றில் 20 வயதே ஆன 14-ம் நிலை வீரர் ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸிடம் 6-7, 7-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித்தோல்வியடைந்தார் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர். தனது 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முனைப்பில் இருந்த பெடரருக்கு இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றின் காலிறுதிக்கு முன்னேறிய முதல் கிரேக்க வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் சிட்ஸிபாஸ். தற்போது நான் உலகிலேயே மகிழ்ச்சியான மனிதனாக திகழ்கிறேன் எனத் தெரிவித்தார்.

More from the section

இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தற்காலிக தடை
புரோ வாலிபால்: முதல் சாம்பியன் ஆகப்போவது சென்னையா இல்லை காலிக்கட்டா?: இன்று இறுதி ஆட்டம்
முதல் ஒரு நாள் மே.இ.தீவுகளை வீழ்த்தியது இங்கிலாந்து 
ஆஸி.  தொடர்: காயமுற்ற பாண்டியாவுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்ப்பு
சாம்பியன்ஸ் லீக்: அதலெட்டிகோ மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி வெற்றி