சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே காரணம்

DIN | Published: 21st January 2019 01:13 AM

இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே காரணம் என ஆஸி. ஒரு நாள் அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.
அடிலெய்ட், மெல்போர்ன் ஆட்டங்களில் இந்தியா அபாரமாக ஆடி வென்று தொடரையும் 2-1 என முதன்முறையாக கைப்பற்றியது. 
இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு வேறு எவரையும் குறைகூற விரும்பவில்லை. டெஸ்ட், ஒரு நாள் தொடரில் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆடிய எனது செயல்பாடே காரணம்.எனது ஆடும் உத்தியிலும் தவறுகளை களைய வேண்டும். சரியான வலுவான ஒருங்கிணைப்பும் அணி மத்தியில் இல்லை. எனது ஆட்டத்திறனை மேம்படுத்த வேண்டும். கேப்டனாக நான் சரியாக ஆடவில்லை. ஓய்வுக்காலத்தை குடும்பத்துடன் கழிக்கலாம் என்றார்.
தொடக்க வீரரான பின்ச் டெஸ்ட் தொடரில் 97 ரன்களையும், ஒரு நாள் தொடரில் 26 ரன்களை மட்டுமே எடுத்தார்.
இந்திய பந்துவீச்சாளர் புவனேஸ்வர்குமார் 3 முறை பின்சை அவுட்டாக்கினார். 
இலங்கைக்கு எதிராக ஆஸி. அணி ஆடவுள்ள டெஸ்ட் தொடரில் ஆரோன் பின்ச் சேர்க்கப்படவில்லை.

More from the section

தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இலங்கை அணி வரலாற்றுச் சாதனை!
துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!
கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை நாளை முறியடிப்பாரா ரோஹித் சர்மா!
இந்தியா vs பாகிஸ்தான் மோதல்: அரசின் முடிவுக்குத் துணை நிற்போம் என விராட் கோலி அறிவிப்பு
ஹெட்மையர் 104, காட்ரெல் 5 விக்கெட்டுகள்: 2-வது ஒருநாள் ஆட்டத்தில் அட்டகாசமாக வெற்றியடைந்த மே.இ. அணி!