சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ஐசிசி டுவிட்டர் கவர் பக்கத்தில் தோனி படம்

DIN | Published: 21st January 2019 01:13 AM

ஆஸி.க்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியாவை வெற்றி பெறச் செய்த முன்னாள் கேப்டன் தோனியின் படத்தை, ஐசிசி சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் பதிவேற்றம் செய்து கெளரவித்துள்ளது. இதற்கு தோனி ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மூன்று ஒரு நாள் ஆட்டங்களிலும் அரை சதம் அடித்து மொத்தம் 193 ரன்களுடன் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார் தோனி. அடிலெய்ட், மெல்போர்ன் ஒரு நாள் ஆட்டங்களில் சிறப்பாக ஆடி வெற்றிக்கு வித்திட்டார்.
கடந்த சில மாதங்களாக சரிவர ஆடாத நிலையில் தான் இழந்த பார்மை தோனி மீண்டும் பெற்று விமர்சகர்களின்வாயை அடைத்து விட்டார். 
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது சுட்டுரை (டுவிட்டர்) கவர் பக்கத்தில் தோனியின் படத்தை வைத்து கெளரவித்துள்ளது.
ஐசிசி சுட்டுரை கவர் பக்கத்தில் வைக்கப்பட்ட சிறந்த படம் இது என பல ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

More from the section

தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இலங்கை அணி வரலாற்றுச் சாதனை!
துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!
கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை நாளை முறியடிப்பாரா ரோஹித் சர்மா!
இந்தியா vs பாகிஸ்தான் மோதல்: அரசின் முடிவுக்குத் துணை நிற்போம் என விராட் கோலி அறிவிப்பு
ஹெட்மையர் 104, காட்ரெல் 5 விக்கெட்டுகள்: 2-வது ஒருநாள் ஆட்டத்தில் அட்டகாசமாக வெற்றியடைந்த மே.இ. அணி!