சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி: தமிழகம் சாம்பியன்

DIN | Published: 21st January 2019 01:12 AM

தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் தமிழக அணி 20 ஆண்டுகள் கழித்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இறுதிச் சுற்று ஆட்டத்தில் மத்திய தலைமைச் செயலக அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஞாயிற்றுக்கிழமை மாலை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இறுதி ஆட்டம் நடைபெற்றது. தொடக்கம் முதலே தமிழகம், மத்திய தலைமைச் செயலக அணிகள் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த முனைந்தன.
12-ஆவது நிமிடத்தில் தமிழக வீரர் முத்துசெல்வன் பெனால்டி கார்னர் மூலம் முதல் கோலை அடித்தார். 20-ஆவது நிமிடத்தில் மத்திய தலைமைச் செயலக வீரர் கோவிந்த் சிங் பதில் கோலடித்தார். தொடர்ந்து தமிழக வீரர் ராயர், மத்திய தலைமைச் செயலக அணி சார்பில் கோவிந்த் சிங் ஆகியோர் கோலடித்ததால் 2-2 என சமநிலை ஏற்பட்டது.
இரண்டாம் பாதி தொடங்கிய சிறிது நேரத்தில் தமிழகத்தின் தாமு பீல்டு கோலடித்தார். 56-ஆவது நிமிடத்தில் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் தமிழக வீரர் வினோதன் கோலடித்தார். ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருந்தபோது, மத்திய செயலக அணி வீரர் கோலடித்தார். இறுதியில் தமிழக அணி 4-3 என்ர கோல் கணக்கில் வென்று 20 ஆண்டுகள் கழித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் தீரஜ்குமார் பரிசளித்தார். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் பெர்ணான்டோ தலைமை தாங்கினார். ஹாக்கி தமிழ்நாடு தலைவர் சேகர் மனோகரன், செயலாளர் ரேணுகாலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.
 

More from the section

தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இலங்கை அணி வரலாற்றுச் சாதனை!
துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!
கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை நாளை முறியடிப்பாரா ரோஹித் சர்மா!
இந்தியா vs பாகிஸ்தான் மோதல்: அரசின் முடிவுக்குத் துணை நிற்போம் என விராட் கோலி அறிவிப்பு
ஹெட்மையர் 104, காட்ரெல் 5 விக்கெட்டுகள்: 2-வது ஒருநாள் ஆட்டத்தில் அட்டகாசமாக வெற்றியடைந்த மே.இ. அணி!