சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

மும்பை மாரத்தான்: லகாட், அலெமு சாம்பியன்: இந்திய பிரிவில் சுதாசிங் முதலிடம்

DIN | Published: 21st January 2019 01:12 AM

டாட்டா மும்பை மாரத்தான் பந்தயத்தில் ஆடவர் பிரிவில் கென்யாவின் காஸ்மோஸ் லகாட்டும், மகளிர் பிரிவில் எதியோப்பியாவின் வொர்க்நேஷ் அலெமுவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
பந்தய தூரமான 42.195 கி.மீ-ஐ கென்ய வீரர் லகாட் 2 மணி , 9 நிமிடங்கள், 15 விநாடிகளில் கடந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
எத்தியோப்பியாவின் அசீவ் பேண்டி, ஆல்நல் சுமேட் ஆகியோர் முறையே இரண்டு, மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.
மகளிர் பிரிவில் வொர்க்நேஷ் அலெமு சாம்பியன் பட்டம் வென்றார். மற்றொரு எத்தியோப்பிய வீராங்கனைகள் அமேன் கோபேனா, பிர்கே டெபிள் ஆகியோர் முறையே இரண்டு, மூன்றாவது இடங்களைப் பெற்றனர்.
இந்தியர்களுக்கான போட்டி மகளிர் பிரிவில் ஆசிய தங்கமங்கையான சுதா சிங் முதலிடம் பெற்றார். 2 மணி, 34 நிமிடங்கள், 56 வினாடிகளில் பந்தயதூரததை கடந்து தனிப்பட்ட சாதனையை படைத்தார். முந்தைய தேசிய சாதனையையும் சுதாசிங் தகர்த்தார்.

More from the section

தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இலங்கை அணி வரலாற்றுச் சாதனை!
துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!
கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை நாளை முறியடிப்பாரா ரோஹித் சர்மா!
இந்தியா vs பாகிஸ்தான் மோதல்: அரசின் முடிவுக்குத் துணை நிற்போம் என விராட் கோலி அறிவிப்பு
ஹெட்மையர் 104, காட்ரெல் 5 விக்கெட்டுகள்: 2-வது ஒருநாள் ஆட்டத்தில் அட்டகாசமாக வெற்றியடைந்த மே.இ. அணி!