செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா

DIN | Published: 22nd January 2019 12:56 AM
வெற்றிக் களிப்பில் செரீனா.


ஆஸி. ஓபன் நான்காம் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா ஹலேப்பை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ்.
திங்கள்கிழமை இருவருக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் செரீனா 6-1 என முதல் செட்டை 20 நிமிடங்களில் எளிதாக வென்றார். எனினும் இரண்டாவது செட்டில் செரீனா முன்னிலை பெற்ற போதிலும், சிமோனா ஹலேப் கடுமையாக போராடி 6-4 என அந்த செட்டை கைப்பற்றினார்.
செரீனா-பிளிஸ்கோவா: இதைத் தொடர்ந்து மூன்றாவது செட்டிலும் இருவரும் மாறி மாறி புள்ளிகளை குவித்தனர். இறுதியில் 6-4 என செரீனா வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அதில் அவர் செக் குடியரசின் பிளிஸ்கோவாவுடன் மோதுகிறார். 
கடந்த 2017 செப்டம்பரில் குழந்தைப் பேறுக்கு பின் சிமோனாவுடன் மோதும் முதல் ஆட்டம் இதுவாகும். இதற்கு முந்தைய மூன்று சுற்று ஆட்டங்களில் ஒரு செட்டைக் கூட செரீனா இழக்கவில்லை. 
ஒஸாகா-விட்டோலினா மோதல்: ஆஸி. ஓபன் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் யுஎஸ் ஓபன் சாம்பியன் நவோமி ஒஸாகா, ஆறாம் நிலை வீராங்கனை எலினா விட்டோலினாவும் மோதுகின்றனர். நான்காம் சுற்று ஆட்டத்தில் ஒஸாகா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் லாட்வியாவின் அனஸ்டசிஜா செவாஸ்டோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனை விட்டோலினா 6-2, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மடிஸன் கீய்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இருவரும் காலிறுதியில் நேருக்கு நேர் மோதுகின்றனர். தரவரிசையில் இல்லாத ரஷிய வீராங்கனை அனஸ்டிசியா 6-7, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் முன்னாள் யுஎஸ் ஓபன் சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபன்ஸை வீழ்த்தினார். காலிறுதியில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸுடன் மோதுகிறார். 

காலிறுதியில் ஜோகோவிச்
ஆஸி. ஓபன் பாட்மிண்டன் காலிறுதிச் சுற்றுக்கு உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.


திங்கள்கிழமை நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் ரஷிய இளம் வீரர் டெனிஸ் மெத்வதேவை 6-4, 6-7, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். காலிறுதியில் அவர் ஜப்பான் வீரர் நிஷிகோரியுடன் மோதுகிறார்.

வெரேவ் அதிர்ச்சித் தோல்வி
ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 4-ஆம் நிலை வீரர் அலெக்சாண்டர் வெரேவ் 1-6, 1-6, 6-7 என்ற நேர் செட்களில் கனடாவின் மிலோஸ் ரனோயிக்கிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். இதனால் இரண்டாவது செட்டின் போது, தனது டென்னிஸ் ராக்கெட்டை கீழே போட்டு வெரேவ் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2018 வேர்ல்ட் டூர் பைனல்ஸில் ஜோகோவிச், பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற வெரேவ், எதிர்கால சாம்பியனாக பார்க்கப்பட்டார். ஆனால் 15 பெரிய போட்டிகளில் 14-ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேற இயலாமல் வெளியேறியுள்ளார் வெரேவ்.

நிஷிகோரி போராடி வெற்றி
ஜப்பான் முன்னணி வீரர் கீய் நிஷிகோரி முதல் இரண்டு செட்களை இழந்த நிலையில் அடுத்த மூன்று செட்களை கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார். நான்காம் சுற்று ஆட்டத்தில் 6-7, 4-6, 7-6, 6-4, 7-6 என்ற 5 செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் பேப்லோ பஸ்டாவை வீழ்த்தினார். 

More from the section

ஐபிஎல் 2019 முதல் இரு வாரங்களுக்கான அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் ஆர்சிபி-யை எதிர்கொள்கிறது சிஎஸ்கே!
என்னுடைய திட்டங்கள் சரியாக செயல்படுகின்றன: டெஸ்ட் கிரிக்கெட் அனுபவத்தை பகிர்ந்த ரிஷப் பண்ட்
இன்னும் 100 நாள்கள்: ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 2019
இந்திய அணியை சமாளிக்க செயல்திட்டம் : ஆரோன் பின்ச்
மாப்பேயின் கோலால் பிஎஸ்ஜி வெற்றி