வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் பங்கேற்பு

DIN | Published: 22nd January 2019 12:53 AM


இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை சிந்து, இந்த சீசனில் பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். கடந்த 2018-இல் காமன்வெல்த், ஆசியப் போட்டி, உலக சாம்பியன்ஷிப், உள்ளிட்ட பெரிய போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, இறுதியாக டிசம்பர் மாதம் பாட்மிண்டன் வேர்ல்ட் டூர் பைனல்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். பிபிஎல் போட்டிக்கு பின் நடைபெற்ற மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் அவர் கலந்து கொள்ளவில்லை. புதன்கிழமை முதல் ஆட்டத்தில் அவர் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் லி ஸியுருய்டன் மோதுகிறார். அதே நேரத்தில் சாய்னா நெவால் மலேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறி தோல்வியுற்றார். இப்போட்டியில் சாய்னா தொடக்க சுற்றில் வெற்றி பெறும் பட்சத்தில் காலிறுதியில் ஜப்பானின் அகேன் யெமகுச்சியை எதிர்கொள்ள நேரிடும்.
ஆடவர் பிரிவில் ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, சாய் பிரணீத், பிரணாய் ஆகியோர் பங்கேற்கின்றனர். சமீர் வர்மா கடந்த சீசனில் ஸ்விஸ் ஓபன், ஹைதராபாத் ஓபன், சையத் மோடி போட்டியில் பட்டம் வென்றார். சாய் பிரணீத் கடந்த சீசனில் சோபிக்கவில்லை. அதே நேரத்தில் பிரணாய் காலில் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இரட்டையர் பிரிவில் சத்விக்-சிராக், மனு அட்ரி, சுமித் ரெட்டி, மகளிர் பிரிவில் அஸ்வினி-சிக்கி ரெட்டி, கலப்பு இரட்டையரில் பிரணவ்-சிக்கி பங்கேற்கின்றனர்.

More from the section

இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தற்காலிக தடை
புரோ வாலிபால்: முதல் சாம்பியன் ஆகப்போவது சென்னையா இல்லை காலிக்கட்டா?: இன்று இறுதி ஆட்டம்
முதல் ஒரு நாள் மே.இ.தீவுகளை வீழ்த்தியது இங்கிலாந்து 
ஆஸி.  தொடர்: காயமுற்ற பாண்டியாவுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்ப்பு
சாம்பியன்ஸ் லீக்: அதலெட்டிகோ மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி வெற்றி