சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ஐசிசி டெஸ்ட் தரவரிசை இந்திய அணி, கோலி தொடர்ந்து முதலிடம்

DIN | Published: 22nd January 2019 12:54 AM


ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியும், கேப்டன் விராட் கோலியும் தங்கள் முதலிடங்களை தக்க வைத்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதன்படி திங்கள்கிழமை வெளியிட்ட தரவரிசைப் பட்டியல் விவரம்:
ஆஸ்திரேலியாவில் பெற்ற 2-1 என்ற டெஸ்ட் தொடர் வெற்றியுடன் அணிகள் பட்டியலில் 116 புள்ளிகளுடன் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 
நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் 897 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அணிகள் பட்டியலில் 110 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும், 108 புள்ளிகளுடன் இங்கிலாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளன. 107 புள்ளிகளுடன் நியூஸிலாந்தும், 101 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவும் முறையே 4, 5-ஆவது இடங்களில் உள்ளன.
பேட்ஸ்மேன்கள்: விராட் கோலி, கேன் வில்லியம்ஸனைத் தொடர்ந்து, இந்திய வீரர் சேதேஸ்வர் புஜாரா 881 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். 874 புள்ளிகளுடன் ஸ்டீவ் ஸ்மித் நான்காவது இடத்திலும், 807 புள்ளிகளுடன் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். ரிஷப் பந்த் 17-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பெளலர்கள்: பெளலர்கள் தரவரிசையில் 882 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா முதலிடத்தில் உள்ளார். 874 புள்ளிகளுடன் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்ஸன், 809 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்காவின் பிலாண்டர், 804 புள்ளிகளுடன் ஆஸி. வீரர் பேட் கம்மின்ஸ், 794 புள்ளிகளுடன் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முறையே 2, 3, 4, 5-ஆவது இடங்களில் உள்ளனர். 711 புள்ளிகளுடன் ஜஸ்ப்ரீத் பும்ரா 15-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

More from the section

தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இலங்கை அணி வரலாற்றுச் சாதனை!
துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!
கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை நாளை முறியடிப்பாரா ரோஹித் சர்மா!
இந்தியா vs பாகிஸ்தான் மோதல்: அரசின் முடிவுக்குத் துணை நிற்போம் என விராட் கோலி அறிவிப்பு
ஹெட்மையர் 104, காட்ரெல் 5 விக்கெட்டுகள்: 2-வது ஒருநாள் ஆட்டத்தில் அட்டகாசமாக வெற்றியடைந்த மே.இ. அணி!