வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

2018-ஆம் ஆண்டின் அணிகளை வழிநடத்தும் விராட் கோலி: இடம்பிடித்தவர்கள் யார்-யார்?

By Raghavendran| DIN | Published: 22nd January 2019 04:27 PM

 

2018-ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளை வழிநடத்தும் விராட் கோலி: இடம்பிடித்தவர்கள் யார்-யார்?

2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் விருதுகள் மற்றும் அணிகள் ஆகியவற்றை சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது. இதில் இந்திய அணியைச் சேர்ந்த விராட் கோலி, ரோஹித் ஷர்மா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி-யின் 3 உயரிய விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்ற விராட் கோலி, ஐசிசி சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அதுபோன்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகமான ரிஷப் பண்ட், டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

2018-ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி விவரம் பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன், இந்தியா), டாம் லாதம் (நியூசிலாந்து), திமுத் கருணரத்ன (இலங்கை), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து), ஹென்ரி நிக்கோல்ஸ் (நியூஸிலாந்து), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர், இந்தியா), ஜேஸன் ஹோல்டர் (மே.இ.தீவுகள்), ககிஸோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா), நாதன் லயன் (ஆஸ்திரேலியா), ஜஸ்ப்ரீத் பும்ரா (இந்தியா), முகமது அப்பாஸ் (பாகிஸ்தான்). 


2018-ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணி விவரம் பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன், இந்தியா), ரோஹித் ஷர்மா (இந்தியா), ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), ராஸ் டெய்லர் (நியூஸிலாந்து), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர், இங்கிலாந்து), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), முஸ்தாபிஸுர் ரஹ்மான் (வங்கதேசம்), ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்), குல்தீப் யாதவ் (இந்தியா), ஜஸ்ப்பீர்த பும்ரா (இந்தியா).

 

 

 

Tags : ஐசிசி விருதுகள் ICC teams of 2018 ICC Men's ODI Team of the Year 2018 ICC Test Team of the Year 2018 ஐசிசி ஒருநாள் அணி 2018 ஐசிசி டெஸ்ட் அணி 2018

More from the section

இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தற்காலிக தடை
புரோ வாலிபால்: முதல் சாம்பியன் ஆகப்போவது சென்னையா இல்லை காலிக்கட்டா?: இன்று இறுதி ஆட்டம்
முதல் ஒரு நாள் மே.இ.தீவுகளை வீழ்த்தியது இங்கிலாந்து 
ஆஸி.  தொடர்: காயமுற்ற பாண்டியாவுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்ப்பு
சாம்பியன்ஸ் லீக்: அதலெட்டிகோ மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி வெற்றி