வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

கோலியின் கடின உழைப்புக்கும், விடா முயற்சிக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது: சச்சின் பாராட்டு

By Raghavendran| DIN | Published: 23rd January 2019 04:25 PM

 

2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டன. அவற்றில் 3 உயரிய விருதுகளான ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சாபர்ஸ் விருது, சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது மற்றும் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருது ஆகியவற்றுக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம் ஐசிசி-யின் 3 உயரிய விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்ற முதல் வீரர் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்தார். 

இதுகுறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், விராட் கோலியின் கடின உழைப்புக்கும், விடா முயற்சிக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐசிசி-யின் ஹாட்ரிக் விருதுகளை வென்றதற்கு பாராட்டுகள். உனது சாதனைகள் பெருமைப்பட வைக்கிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அஸ்வின், புஜாரா மற்றும் கெய்ஃப் உள்ளிட்ட உலகளவிலான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து விராட் கோலிக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Tags : Sachin Tendulkar virat kohli ICC Awards சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி ஐசிசி விருதுகள்

More from the section

2013 ஐபிஎல் முறைகேடு: மௌனம் கலைத்த தோனி
மேட்ச் ஃபிக்ஸிங்: டென்மார்க் பாட்மிண்டன் வீரருக்கு 18 மாதம் தடை
ஐசிசி உலகக் கோப்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர் பட்டாளம் இங்கிலாந்தில் திரள முடிவு
ஆஸி.யை எதிர்கொள்கிறது பாக். அணி: இன்று முதல் ஒரு நாள் கிரிக்கெட்
மகளிர் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து