24 மார்ச் 2019

அம்பட்டி ராயுடு பந்துவீசத் தடை: ஐசிசி அறிவிப்பு!

By எழில்| DIN | Published: 28th January 2019 04:20 PM

 

இந்திய வீரர் அம்பட்டி ராயுடுவின் பந்துவீச்சு, கிரிக்கெட் விதிமுறைகளுக்குப் புறம்பாக இருப்பதால் சர்வதேசப் போட்டிகளில் அவர் பந்துவீசுவதற்குத் தடை விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் பந்துவீசினார் ராயுடு. பந்துவீசும்போது ராயுடுவுடைய முழங்கை ஐசிசியால் அனுமதிக்கப்பட்ட அளவான 15 டிகிரிக்கு மேல் வளைவது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ராயுடுவின் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய ஐசிசி முடிவெடுத்தது. ஆனால் அவர் பரிசோதனையில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தற்போது, சர்வதேசப் போட்டிகளில் ராயுடு பந்துவீசுவதற்குத் தடை விதித்துள்ளது ஐசிசி. தன்னுடைய பந்துவீச்சு முறையை மாற்றிக்கொண்ட பிறகு மறு ஆய்வுக்கு ராயுடு விண்ணப்பிக்கலாம். அதுவரை அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
 

Tags : Australia ICC Ambati Rayudu international cricket

More from the section

தொடங்கியது ஐபிஎல் 2019: பெங்களூருவை நொறுக்கியது சென்னை
ஹைதராபாத்}கொல்கத்தா, மும்பை}தில்லி அணிகள் இன்று மோதல்
2020 டி20 உலகக் கோப்பைக்கு பின் ஓய்வு
மியாமி ஓபன்: ஜோகோவிச், ஒஸாகா முன்னேற்றம்
சிஆர்பிஎப் மற்றும் முப்படைகளுக்கு ரூ.20 கோடி நிதி: பிசிசிஐ வழங்கியது