சனிக்கிழமை 20 ஜூலை 2019

அரையிறுதித் தோல்வி: இந்திய ரசிகர்களைக் கிண்டல் செய்யும் வகையில் விடியோ வெளியிட்ட பாலிவுட் ஹீரோ 

DIN | Published: 12th July 2019 08:19 PM

 

மும்பை: உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியுள்ள நிலையில்  இந்திய ரசிகர்களைக் கிண்டல் செய்யும் வகையில் பாலிவுட் ஹீரோ ஒருவர் விடியோ வெளியிட்டுள்ளார். 

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது , அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம், இந்திய அணி போராடித் தோற்றது. உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று கணிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் தோல்வி கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்திய ரசிகர்களைக் கிண்டல் செய்யும் வகையில் பாலிவுட் ஹீரோ ஒருவர் விடியோ வெளியிட்டுள்ளார். 

பிரபல பாலிவுட் ஹீரோவான விவேக் ஓபராய் வெள்ளியன்று பதிவிட்டுள்ள ட்வீட்டில், "உலகக்கோப்பை அரைஇறுதிப் போட்டியில் இந்திய அணியின் ரசிகர்களுக்கு இப்படிதான் ஆகி விட்டது" என்ற குறிப்புடன் 'பிராங்' வகை விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில் வெளிநாட்டுப் பெண்மணி ஒருவர் இந்தியர் ஒருவரை கட்டிப்பிடிக்க வருவது போன்று வருகிறார். அந்த இந்தியரும் தன்னைதான் அவர் கட்டிப்பிடிக்க வருகிறார் என்று நினைத்து அந்த பெண்மணியை கட்டி பிடிக்கும் போது, அவர் அந்த இந்தியருக்குப் பின்னால் உள்ள ஒரு வெளிநாட்டு ஆண் அந்த பெண்மணியை கட்டிபிடிக்கிறார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அந்த இந்தியர் அசடு வழிந்தவாறே கடந்து செல்வார் இந்த விடியோவைப் பயன்படுத்தியே இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அவர் கிண்டல் செய்திருக்கிறார் ஓபராய்.

 

Tags : world cup semi final india new zealand match bollywood vivek oberoi twet controversy

More from the section

மே.இ.தீவுகள் தொடர்: இந்திய அணித் தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்தியா சாம்பியன்
ஐசிசி ஹால் ஆஃப் பேமில் சச்சின், ஆலன் டொனால்ட்
திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி
தோனி முடிவெடுக்க இதுவே சரியான தருணம்: கம்பீர்