சனிக்கிழமை 20 ஜூலை 2019

11 வருடங்கள் கழித்து விம்பிள்டனில் மீண்டும் மோதும் ஃபெடரர் - நடால்!

By எழில்| DIN | Published: 12th July 2019 11:55 AM

 

டென்னிஸ் ரசிகர்களால் 2008 விம்பிள்டன் இறுதிப் போட்டியை மறக்கமுடியாது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஃபெடரரை வீழ்த்தினார் நடால். 4 மணி நேரம் 48 நிமிடங்களுக்கு அந்த ஆட்டம், டென்னிஸ் வரலாற்றில் மிகச்சிறந்த ஆட்டம் என்று நிபுணர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டுப்பெற்றது. 

இந்நிலையில் 11 வருடங்கள் கழித்து விம்பிள்டனில் மீண்டும் ஃபெடரர் - நடால் மோதல் இன்று நிகழவுள்ளது. விம்பிள்டனில் தனது 100-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ள ஃபெடரர், 9-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளார். அதே நேரத்தில் நடாலும், தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தீவிரமாக உள்ளார்.  2019 விம்பிள்டன் அரையிறுதிச்சுற்றில் களிமண் தரை மன்னனும், புல்தரை மன்னனும் மோதவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஃபெடரரும் நடாலும் 39 முறை மோதி அதில் 24 ஆட்டங்களில் நடாலும் 15 ஆட்டங்களில் ஃபெடரரும் வென்றுள்ளார்கள். விம்பிள்டனில் இருவரும் மூன்று முறை மோதியதில் இரண்டு ஆட்டங்களில் ஃபெடரர் வென்றுள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தை நடால் வெல்வதற்கே அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

Tags : Federer vs Rafael Nadal

More from the section

81 ரன்கள் எடுத்த அக்‌ஷர் படேல்: 4-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய ஏ அணி தோல்வி ( ஆட்டத்தின் முழு விடியோ)
மே.இ.தீவுகள் தொடர்: இந்திய அணித் தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்தியா சாம்பியன்
ஐசிசி ஹால் ஆஃப் பேமில் சச்சின், ஆலன் டொனால்ட்
திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி