21 ஏப்ரல் 2019

ஆட்டச்சுமை நிர்வாகம் தொடர்பாக கண்மூடித்தனமாக கொள்கையை வகுக்க முடியாது: ராகுல் திராவிட்

DIN | Published: 21st March 2019 01:05 AM


ஆட்டச்சுமை நிர்வாகம் தொடர்பாக கண்மூடித்தனமாக கொள்கையை வகுக்க முடியாது என இந்திய கிரிக்கெட் ஏ அணி பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியுள்ளார்.
ஐபிஎல் ஆட்டங்களால் வீரர்களுக்கு கூடுதல் ஆட்டச்சுமை ஏற்படும். இதனால் உலகக் கோப்பைக்கு தயாராவதில் பாதிப்பு ஏற்படும் என பொது விவாதம் எழுந்துள்ளது. வீரர்கள் ஆட்டச்சுமையை கவனமாக நிர்வகிக்க வேண்டும் என கேப்டன் கோலி உள்பட பல்வேறு தரப்பினர் கூறியுள்ளனர்.
இந்நிலையில் புதன்கிழமை திராவிட் கூறியதாவது: 
ஆட்டச்சுமை நிர்வாகம் தொடர்பாக கண்மூடித்தனமாக கொள்கையை வகுக்க முடியாது. வீரர்களே தங்களுக்கான எல்லை எது என்பதை றிவர். தங்கள் உடலுக்கு எது தேவை என்பதை அவர்களே அறிந்துள்ளனர். 
ஆஸி. பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து ஆடி வந்தால், உடல்தகுதி நன்றாக உள்ளது எனக் கூறியுள்ளார். அதே போல் ஒவ்வொரு வீரருக்கும் இது வித்தியாசப்படும். நாம் வீரர்களை நம்ப வேண்டும் என்றார் திராவிட்.
முகமது ஷமிக்கு போதிய ஓய்வு:
ஆட்டச்சுமை நிர்வாகத்தின் ஒரு பகுதியாக கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு போதிய ஓய்வு தரப்படும் என அதன் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் கூறியுள்ளார். தற்போது இந்திய வீரர்களின் ஆட்டச்சுமை நிர்வாகம் குறித்து தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2018 சீசனில் ஷமி அபாரமாக பந்துவீசினார். கேஎல்.ராகுல், ஷமியுடன் இதுதொடர்பாக ஆலோசித்தோம். பஞ்சாப் அணியில் பெரிய பங்களிக்க இருவரும் தயாராக உள்ளனர். ஒவ்வொரு வீரரைப் போலவே அவர்களை நடத்துவோம். ஷமியின் ஆட்டச்சுமை குறித்து தீவிரமாக கண்காணித்து போதிய ஓய்வு தரப்படும் என்றார்.
சிஎஸ்கே அணியில் குறைவான ஆட்டச்சுமை:
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலையில் சிஎஸ்கே அணியில் ஆட்டச்சுமை நிர்வாகம் குறைவாகவே இருக்கும். இந்திய அணியில் இடம் பெறக் கூடியவர்களாக தோனி, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு போன்றோர் உள்ளனர். பந்துவீச்சாளர்களின் ஆட்டச்சுமையை நிர்வகிப்பதுதான் பிரதான விஷயமாகும். இந்த விவகாரம் அணிகளின் பங்கேற்பிலும் சிறிது சிக்கலை உண்டாகும். உலகக் கோப்பையில் ஆடவுள்ள அயல்நாட்டு வீரர்கள் எப்போது திரும்புவர் என்பதை அறிய முடியாது. உடல்தகுதியின் ஒரு பகுதியாக யோ-யோ சோதனை சிஎஸ்கே நிகழ்ச்சி நிரலில் இல்லை. எங்கள் வீரர்கள் 100 சதவீதம் மனதளவிலும், உடலளவிலும் தகுதியுடன் உள்ளதை உறுதி செய்வோம். எனினும் இந்திய அணி நிர்வாகம் வகுக்கும் தரத்துக்கு ஏற்பட செயல்படுவோம் என பிளெம்மிங் கூறியுள்ளார்.

More from the section

தில்லி வெற்றி
1987 ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் ஆஸ்திரேலியா
ஆசிய குத்துச்சண்டை போட்டி: காலிறுதியில் தீபக், லவ்லினா
மான்டெகார்லோ டென்னிஸ்: டால் அதிர்ச்சித் தோல்வி
பெண்களை விமர்சித்த  விவகாரம்: பாண்டியா, ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்