புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

சாஃப் மகளிர் கால்பந்து: இறுதிச் சுற்றில் இந்தியா

DIN | Published: 21st March 2019 01:05 AM
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய மகளிர் அணியினர்.


தெற்காசிய மகளிர் கால்பந்து கோப்பை (சாஃப்) போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
நேபாளத்தின் பீரட் நகரில் சாஃப் கால்பந்து கோப்பை நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்-வங்கதேசமும் மோதின.
இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை நொறுக்கியது. தலிமா சிப்பர், மணிஷா, இந்துமதி, சஞ்சு கோலடித்தனர்.
பதிலுக்கு வங்கதேச அணியால் கோல் போட முடியவில்லை. வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் நேபாளத்துடன் மோதவுள்ளது இந்திய அணி.


 

More from the section

தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவி பறிபோகவுள்ளதா?: கேகேஆர் பயிற்சியாளர் காலிஸ் பதில்!
தன் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்த தோனிக்கு வெற்றியைப் பரிசாக அளித்த வாட்சன்! 
பிளேஆஃப் சுற்றுக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றது சிஎஸ்கே: வாட்சன் அதிரடி ஆட்டம்! (விடியோ)
முதலிடத்தில் சென்னை
ஆசிய தடகளப் போட்டி: தங்கம் வென்று கோமதி சாதனை