தாகூர் நினைவு தமிழ் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எம்ஆர்பி கல்வி சங்கம் வெளியிட்ட அறிக்கை:
எம்ஆர்பி கல்வி சங்கம் சார்பில் பெங்களூரு, யஷ்வந்த்பூர், மாறப்பனபாளையம் பகுதியில் நடத்தும் தாகூர் நினைவு தமிழ் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி, 1968-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும்.
இப்பள்ளியில் 2017-18-ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பள்ளியில் ஆங்கிலம், கன்னடம் மொழிகள் தவிர, இதர அனைத்து பாடங்களும் தமிழ் மொழியில் கற்பிக்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு நடந்த 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். மேலும் இப்பள்ளி 80 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளது.
இப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சீருடை, புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இத்துடன் இலவசமாக மதிய உணவும், பாலும் அளிக்கப்படுகிறது.
கர்நாடக அரசின் அங்கீகாரமும், சிறுபான்மையோர் பள்ளி என்ற சான்றிதழையும் பெற்றுள்ளது. பள்ளி அமைந்துள்ள பகுதியின் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்கலாம்.
தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு வியாபாரம் செய்யவும், கட்டடப் பணிகள், சாலைப் பணிகள் செய்ய வரும் தொழிலாளர்கள் பெங்களூரில் தமிழ் படிக்க இயலாது என கருதி தங்கள் பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்திவிடுகின்றனர்.
இதுபோன்ற பொருளாதார வாய்ப்பு குறைந்த மாணவ, மாணவிகள் தாகூர் நினைவு தமிழ் பள்ளியில் சேர்ந்து தங்கள் படிப்பைத் தொடரலாம். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 9035644959, 9880634357, 9449323925 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.