தென்மேற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் இயக்கப்படும் ஒருசில ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மைசூரு-பெங்களூரு, சென்னப்பட்டணா-கோலார் இடையிலான ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஜூன் 12-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. ரயில் எண்-12613- மைசூரு-பெங்களூரு திப்பு விரைவு ரயில் மைசூரில் காலை 11.30 மணிக்குப் புறப்பட்டு, மண்டியா ரயில் நிலையத்திற்கு நண்பகல் 12.09 மணிக்கு வந்தடையும்.
பின்னர், நண்பகல் 12.10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, பெங்களூரை பிற்பகல் 2 மணிக்கு வந்தடைகிறது. ரயில் எண்-76525-சென்னப்பட்டணா-கோலார் டிஎம்யூ பயணியர் ரயில் சென்னப்பட்டணாவில் இருந்து கோலாருக்கு இரவு 9.30 மணிக்கு வந்து சேரும்.
சென்னப்பட்டணா, ஜனகட்டா ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.