பெங்களூரில் வெள்ளிக்கிழமை (ஜூன்16) முதல் கன்னடம் மற்றும் வங்காள மொழி திரைப்பட விழா நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய திரைப்படத் துறையின் புகழ்பெற்ற இயக்குநர் சத்யஜித்ரே நிறுவியுள்ள இந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கர்நாடக திரைப்பட அகாதெமி சார்பில் பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் வங்காளம் மற்றும் கன்னட மொழி திரைப்பட விழாக்கள் நடக்கவிருக்கின்றன.
கர்நாடகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு இடையே கலாசார பரிமாற்றங்களை நிகழ்த்துவதற்காக திரைப்பட விழா நடத்தப்படுகிறது. பெங்களூரு, சாமுண்டீஸ்வரி ஸ்டுடியோவில் ஜூன் 16 முதல் 18-ஆம் தேதி வரை வங்காள மொழி திரைப்பட விழாவும், கொல்கத்தாவில் உள்ள நந்தன் வளாகத்தில் ஜூலை 21 முதல் 23-ஆம் தேதிவரை கன்னட திரைப்பட விழாவும் நடக்கவிருக்கின்றன.
பெங்களூரில் ஜூன் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சாமுண்டீஸ்வரி ஸ்டுடியோவில் திரைப்பட விழாவை மதாபிமுகர்ஜி தொடக்கிவைக்கிறார். அன்று சேகர் தாஸ் இயக்கிய ஜோகஜோக் வங்காள மொழித் திரைப்படம் திரையிடப்படும்.
இந்த விழாவில் கன்னட மற்றும் வங்காள மொழி திரைப்படக் கலைஞர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் ரூப்கதா,ஒன்ய ஒப்புலா,அப்பி சென்,நயன்சம்பர்தின் ராத்ரி,சங்கர்முடி,தீன்கஹோன் வங்காள மொழிப் படங்கள், ரங்கி தரங்கா,யூ டர்ன் கன்னட திரைப்படங்கள் திரையிடப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.