பெங்களூரு

ஊதுபத்திக்கு சேவை வரி: குடிசைத் தொழிலாளர்கள் பாதிப்பு

ஊதுபத்திக்கு விதித்துள்ள 12 சதம் சரக்கு மற்றும் சேவை வரியால் குடிசைத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊதுபத்தி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் சரத்பாபு தெரிவித்தார்.

தினமணி

ஊதுபத்திக்கு விதித்துள்ள 12 சதம் சரக்கு மற்றும் சேவை வரியால் குடிசைத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊதுபத்தி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் சரத்பாபு தெரிவித்தார்.
 பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 கோயில்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் பூஜை பொருளாக ஊதுபத்தி உள்ளது. தேசிய அளவில் பயன்படுத்தும் ஊதுபத்தியை பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு தயாரிக்கப்படுகிறது.
 குடிசைத் தொழிலாக உள்ள ஊதுபத்தி தயாரிப்பு தொழிலை நம்பி, ஏழைகளும், பெண்களும் உள்ளன. குறிப்பாக கிராமங்களில் கல்வி அறிவு இல்லாத பல தொழிலாளர்கள் ஊதுபத்தியை தயார் செய்யும் தொழிலை நம்பியுள்ளனர்.
 இந்தத் தொழிலுக்கு இதுவரை வரி விதிக்கப்படாததால், இந்த தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியில் ஊதுபத்திக்கு 12 சதம் வரி விதிக்கப்
 பட்டுள்ளது.
 குடிசை தொழிலான இதற்கு 12 சதம் வரி விதிக்கப்பட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சரக்கு மற்றும் சேவை வரியால் இந்த தொழில் முற்றிலும் நசிந்து போகும் நிலையை எட்டியுள்ளது. இதனால், இந்த தொழிலை நம்பியுள்ள தொழிலாளர் குடும்பங்களும், ஊதுபத்தியைப் பயன்படுத்து பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 தொழிலாளர்களின் நலன கருதி, சரக்கு மற்றும் சேவை வரியை முற்றிலுமாக குறைக்க அரசு முன்வர வேண்டும். அல்லது குறைந்தபட்ச வரியை விதிப்பதன் மூலம் இந்த தொழிலை நம்பியுள்ளவர்களைக் காப்பாற்ற முடியும். எங்கள் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT