முகப்பு
பெங்களூரு

கிறிஸ்தவ விழா: தரூர் ரயில் நிலையத்தில் தாற்காலிகமாக ரயில்கள் நிறுத்தம்

மெத்த டிஸ்ட் தேவாலய திருவிழாவையொட்டி, தரூர் ரயில் நிலையத்தில் தாற்காலிகமாக ரயில்கள் நிறுத்தப்படுகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

மெத்த டிஸ்ட் தேவாலய திருவிழாவையொட்டி, தரூர் ரயில் நிலையத்தில் தாற்காலிகமாக ரயில்கள் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரூரில் உள்ள மெத்தடிஸ்ட் தேவாலயத்தில் நடக்கவிருக்கும் கிறிஸ்தவ பெருவிழாவை முன்னிட்டு நவ.19-ஆம் தேதி வரை தரூர் ரயில் நிலையத்தில் 4 ரயில்கள் தாற்காலிகமாக நின்று செல்லும்.
ரயில் எண்-16593-நாந்தேட்-பெங்களூரு விரைவு ரயில் தரூர் ரயில் நிலையத்திற்கு மாலை 3.13 மணிக்கு வந்து மாலை 3.14 மணிக்கும்; ரயில் எண்-16594-பெங்களூரு-நாந்தேட் விரைவுரயில் தரூர் ரயில் நிலையத்திகு நண்பகல் 1.01 மணிக்கு வந்து, நண்பகல் 1.02 மணிக்கும்; ரயில் எண்-16572-பீதர்-யஷ்வந்த்பூர் விரைவுரயில் தரூர் ரயில் நிலையத்திற்கு இரவு 8.47 மணிக்கு வந்து, இரவு 8.48 மணிக்கு புறப்படும்.
ரயில் எண்-16571-யஷ்வந்த்பூர்-பீதர் விரைவு ரயில் தரூர் ரயில் நிலையத்திற்கு காலை 6.43 மணிக்கு வந்து, காலை 6.44 மணிக்குப் புறப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →