முகப்பு
பெங்களூரு

வியாபாரியிடம் பணம் பறிப்பு 

சிகரெட் வியாபாரியை வழிமறித்து ரூ. 1.5 லட்சத்தை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 13 பிப்ரவரி 2019, 10:31 am IST
பகிர்:

சிகரெட் வியாபாரியை வழிமறித்து ரூ. 1.5 லட்சத்தை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு அஸ்வத்நகரைச் சேர்ந்த சிகரெட் வியாபாரியான சையத், திங்கள்கிழமை மாலை தனது வாடிக்கையாளர்களிடம் ரூ. 1.5 லட்சத்தை வசூலித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சையத்தை வழிமறித்து, அவர் பையில் வைத்திருந்த ரூ. 1.5 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.இதுகுறித்து ஹென்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.