பெங்களூரு

இந்திய மருத்துவச் சேர்க்கை: நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம்

DIN

" நீட்' தேர்வின் அடிப்படையில் கர்நாடகத்தில் உள்ள இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் ஜூலை 17, 18-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து கர்நாடகத் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: -
"நீட் ' தேர்வின் அடிப்படையில் கர்நாடகத்தில் உள்ள இந்திய மருத்துவங்களான ஆயுர்வேதம், சித்தா, ஓமியோபதி, யுனானி போன்ற மருத்துவக்கல்வி, கால்நடை, பண்ணை அறிவியல்கல்வி கல்லூரிகளில் சேரிக்கை பெறவிரும்பும் மாணவர்களின் சான்றிதழ்களை சரிப்பார்ப்பதற்கான சிறப்புமுகாம் பெங்களூரு மல்லேஸ்வரம், 18-ஆவது குறுக்குத்தெருவில் அமைந்துள்ள கர்நாடக தேர்வு ஆணையத்தின் வளாகத்தில் ஜூலை 17, 18-ஆம் தேதிகளில் தினமும் காலை 10 மணி முதல் நடக்கும். 
முகாமில் கட்டாயம் கலந்துகொண்டு சான்றிதழ்களை சரிபார்த்துகொள்ள வேண்டுகிறோம். தவறினால் சேர்க்கை பெறுவது கடினமாகிவிடும். மேலும் விவரங்களுக்கு http://kea.kar.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

இஸ்ரேலுக்கு செல்லும் விமானங்கள் ரத்து?

நயினார் நாகேந்திரனின் நண்பர் வீட்டில் சோதனை

லோகேஷ் கனகராஜின் புதிய பட அறிவிப்பு!

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரத்தில் எனக்கு எந்த சம்மனும் வரவில்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT